கேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பது என்றால் என்ன?
பதில்: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பது என்றால் குறிப்பிடப்பட்டக் காலக் கட்டம் வரை பி.டி.பி.டி.என். கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதாகும்.
கேள்வி 2: யாருக்கு இந்த கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான ஒத்தி வைப்பு வழங்கப்படும்?
பதில்: இந்த கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான ஒத்தி வைப்பு அனைவருக்கும் வழங்கப்படும்.
கேள்வி 3: இந்த கோவிட்-19 கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான ஒத்தி வைப்புக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
பதில்: இதற்குக் கடனாளிகள் விண்ணப்பிக்க வேண்டியதில்லை, மாறாக ஒத்தி வைப்பு தானாக வழங்கப்படும்.
கேள்வி 4: கோவிட்-19 கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான ஒத்தி வைப்பு எப்போது அமலுக்கு வருகிறது?
பதில்: இந்த ஒத்தி வைப்பு நடவடிக்கை மார்ச் மாதம் 19ஆம் தேதி தொடங்கி வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
கேள்வி 5: கடனாளிகளுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
பதில்: கடனாளிகளுக்குக் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு ஒத்தி வைப்பு வழங்கப்பட்டு இந்த கோவிட்-19 ஒத்தி வைப்புக் காலக் கட்டம் முழுவதும் அமலாக்க மற்றும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து விலக்களிக்கப்படும்.
கேள்வி 6: இதற்கு நடப்பிலுள்ள சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்துக் கொள்ளும் முறையை நான் ரத்துச் செய்ய வேண்டுமா?
பதில்: தேவையில்லை. நடப்பிலுள்ள சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்துக் கொள்ளும் முறை அனைத்துக் கடனாளிகளுக்கும் திரும்பச் செலுத்தும் தொகை ஒத்தி வைப்புக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளது. இதில் எப்படியிருப்பினும் பிடித்தம் செய்யும் முறையைத் தொடர விரும்பும் கடனாளிகள் தங்களின் விண்ணப்பத்தை பி.டி.பி.டி.என். அதிகாரப்பூர்வ இணையத் தளமான (www.ptptn.gov.my/covid-19)இல்மார்ச் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கேள்வி 7: பிடித்தம் செய்வதிலிருந்து ஒத்தி வைப்பு நடவடிக்கை எப்போது அமலுக்கு வரும்? மார்ச்சிலா அல்லது ஏப்ரலிலா?
பதில்: பிடித்தம் செய்வதிலிருந்து ஒத்தி வைப்பு நடவடிக்கையும் ஒரே தேதியில்தான் அமல்படுத்தப்படும். இருந்த போதிலும் அனைத்துப் பொதுச்சேவை ஊழியர்களும் (மத்திய அரசு / மாநில அரசு / சட்ட அமைப்பு) மற்றும் ஒரு பகுதி தனியார் நிறுவன ஊழியர்கள் ஒத்தி வைப்புக்கான அறிவிப்புக்கு முன்பாகவே பிடித்தம் செய்துக் கொள்வர். தங்களின் பிடித்தக் கணக்கை இவ்விவகாரம் தொடர்பானக் கட்டண உறுதிப்படுத்தலை (<https://www.ptptn.gov.my/semakanpinjaman) வாயிலாகக் கடனாளிகள் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில் செலுத்தப்பட்டத் தொகை திரும்பக் கொடுக்கப்பட மாட்டாது.
சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்துக் கொள்ள www.ptptn.gov.my/covid-19 <http://www.ptptn.gov.my/covid-19>இணையத் தளத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிப்பவர்களைத் தவிர இந்த சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்துக் கொள்வது ஏப்ரல் மாதத்திலிருந்து வரும் செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்படும்.
கேள்வி 8: மார்ச் மாதச் சம்பளத்திலிருந்து முதலாளிமார்கள் பிடித்தம் செய்து பி.டி.பி.டி.என்.னுக்கு தொகையைச் செலுத்தா விட்டால் அதைக் கடனாளியிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமா?
பதில்: தேவையில்லை. சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்தத் தொகையை முதலாளிமார்கள் நேரடியாக பி.டி.பி.டி.என்.னுக்குச் செலுத்த வேண்டும். தங்களின் பிடித்தக் கணக்கை இவ்விவகாரம் தொடர்பானக் கட்டண உறுதிப்படுத்தலை (https://www.ptptn.gov.my/semakanpinjaman) வாயிலாகக் கடனாளிகள் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில் செலுத்தப்பட்டத் தொகை திரும்பக் கொடுக்கப்பட மாட்டாது.
கேள்வி 9: ஒத்தி வைப்புக்கானக் கால அவகாசம் முடிவுற்றதும் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்துக் கொள்ள கடனாளி புதிதாக விண்ணப்பிக்க வேண்டுமா?
பதில்: தேவையில்லை. அனைத்து சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்துக் கொள்ளும் நடவடிக்கைகளும் கோவிட்-19 திரும்பச் செலுத்தும் ஒத்தி வைப்புக்குப் பிறகு தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
கேள்வி 10: ஏ.கே.பி.கே. வாயிலாகக் கடனைச் செலுத்துவோருக்கு ஒத்தி வைப்பு வழங்கப்படுமா?
பதில்: இவ்விவகாரம் குறித்துக் கடனாளிகள் ஏ.கே.பி.கே.உடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
கேள்வி 11: அப்படி கோவிட்-19 நோய் முழுமையாக குணமடையா விட்டால் செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகும் இந்த ஒத்தி வைப்பு நடவடிக்கைத் தொடரப்படுமா?
பதில்: கடன் தொகையைத் திரும்பச் செலுத்தும் திட்டம் தொடர்பான முடிவு அவ்வப்போது ஆய்வுச் செய்யப்படும்.
கேள்வி 12: இந்த ஒத்தி வைப்பின் மூலம் ஏற்படும் பாதிப்பினால் நான் கடன் தொகையைத் திரும்பச் செலுத்துவதற்கானக் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?
பதில்: ஆமாம். கோவிட்-19 திரும்பச் செலுத்தும் தொகை ஒத்தி வைப்புக்கு முன்பு நிலுவைத் தொகை இல்லாத அனைத்துக் கடனாளிகளுக்கும் மறு சீரமைப்பு நடவடிக்கை வாயிலாகக் கடன் தொகையைத் திரும்பச் செலுத்தும் கால அவகாசம் நீட்டிக்கப்படும்.
கேள்வி 13: கோவிட்-19இல் திரும்பச் செலுத்தப்படும் தொகை ஒத்தி வைப்புக்கு முன்பு நிலுவைத் தொகைக் கொண்ட கடனாளிகளுக்கு எவ்வாறு மறுசீரமைப்புச் செய்வது?
பதில்: இந்த ஒத்தி வைப்புக்கு முன்பு நிலுவைத் தொகையைக் கொண்டிருக்கும் கடனாளிகள் கடன் தொகையை மறுசீரமைப்புச் செய்வது குறித்து பி.டி.பி.டி.என்.னுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
கேள்வி 14: வழக்கமானக் கடனாளிகளுக்கானக் கடன் தொகை எவ்வாறு மறுசீரமைப்புச் செய்யப்படும்?
பதில்: வழக்கமானக் கடனாளிகளுக்கானக் கடன் தொகை சம்பள மாற்றத்தின் வாயிலாக மறுசீரமைப்புச் செய்யப்படும்.
கேள்வி 15: இதில் சம்பள மாற்றம்/மறுசீரமைப்பு/மறுதவணை/ ஒருங்கிணைக்கப்பட்ட விண்ணப்பங்களை இந்த ஒத்தி வைப்புக் காலக் கட்டத்தில் செய்ய முடியுமா?
பதில்: முடியாது. இந்த அனைத்து விண்ணப்பங்களும் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படும்.
கேள்வி 16: இந்த ஒத்தி வைப்புக் காலம் முழுவதும் கடனாளியின் சி.சி.ஆர்.ஐ.எஸ். பதிவு எப்படி இருக்கும்?
பதில்: முடியாது. இந்த ஒத்தி வைப்புக் கால அவகாசம் அமல்படுத்தப்படும் முன்னர் கடனாளியின் சி.சி.ஆர்.ஐ.எஸ். பதிவு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். காரணம் இந்த ஒத்தி வைப்புக் கால அவகாசம் தடைக் காலமாகக் கருதப்படும். இருந்த போதிலும் அப்படி கடனாளி கடன் தொகையைத் தொடர்ந்து திரும்பச் செலுத்தினால் அவர் செலுத்தியத் தொகையின் அடிப்படையில் பதிவு புதுப்பிக்கப்படும்.
கேள்வி 17: கோவிட்-19க்குப் பிறகு கடன் தொகை மறுசீரமைப்புச் செய்யப்பட்டால் அது கடனாளியின் சி.சி.ஆர்.ஐ.எஸ். பதிவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
பதில்: இதில் கடனாளிக்கு முந்தைய நிலுவைத் தொகைகள் இல்லாதவரை சி.சி.ஆர்.ஐ.எஸ்.சில் கடனாளிக்குக் கடன் தொகை மறுசீரமைப்பு பாதிப்பை ஏற்படுத்தாது.
கேள்வி 18: கடன் மறுசீரமைப்பு அணுகுமுறையில் திரும்பச் செலுத்துவதற்கானக் கால அவகாசம் மாறும் போது கடனாளி புதிய ஒப்பந்தத்தைப் பெறுவாரா?
பதில்: இல்லை. இதில் பி.டி.பி.டி.என்.னுடன் பதிவுச் செய்த மின்னஞ்சல் வாயிலாகத்தான் கடனாளிக்கு அறிக்கை வரும். தங்களின் மின்னஞ்சலைப் புதுப்பித்துக் கொள்ள விரும்பும் கடனாளிகள் (https://www.ptptn.gov.my/mail/Utama) என்ற இணையத் தளத்தில் செய்யலாம்.
கேள்வி 19: இந்த ஒத்தி வைப்புக் காலக் கட்டம் முழுவதும் நிர்வாகக் கட்டணம் விதிக்கப்படுமா?
பதில்: ஆமாம். தற்போது நடப்பில் உள்ளதைப் போல் திரும்பச் செலுத்தும் தொகை ஒத்தி வைப்புக் கால அவகாசத்திற்கு நிர்வாகக் கட்டணம் விதிக்கப்படும்.
கேள்வி 20: ஒத்தி வைப்புக் காலக் கட்டம் முழுவதும் கடனாளி கடன் தொகையைச் செலுத்த முடியுமா?
பதில்: முடியும். கடனாளி இணைய வங்கி முறை வாயிலாக அதைச் செய்யலாம்.
கேள்வி 21: நடமாடும் தடை உத்தரவு (பி.கே.பி.) காலக் கட்டத்தில் பி.டி.பி.டி.என். செயல்படுமா?
பதில்: நடமாடும் தடை உத்தரவு (பி.கே.பி.) காலக் கட்டத்தில் பி.டி.பி.டி.என். குறிப்பிட்ட அளவில் மட்டுமே செயல்படும். இதில் பி.டி.பி.டி.என்.னின் தலைமையகம் உட்பட அனைத்துக் கிளைகளும் மூடப்பட்டிருக்கும். இதன் அழைப்பு மையம் கூட கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டு விட்டது.
கேள்வி 22: பி.கே.பி. காலக் கட்டத்தில் பி.டி.பி.டி.என்.னை வாடிக்கையாளர்கள் எப்படித் தொடர்புக் கொள்வது?
பதில்: பி.கே.பி. காலக் கட்டத்தில் பி.டி.பி.டி.என்.னை வாடிக்கையாளர்கள் கீழ்க்கண்ட அணுகுமுறைகள் வாயிலாகத் தொடர்புக் கொள்ளலாம்:-
I. https://www.ptptn.gov.my/hubungi-ptptn இல் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரியைத் தொடர்புக் கொள்ளுதல்; அல்லது
II. https://bit.ly/eAduanPTPTN இல்கேள்விகளைக் கேட்டால் எங்களின் அதிகாரி வேலை செய்யும் 7 நாட்களில் பதிலளித்து விடுவார்.
தேசிய உயர்கல்வி நிதி அமைப்பு
2020 மார்ச், 31st
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்