கோலாலம்பூர், ஏப்.8-
உணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு சோதனையை போலீஸ் மேற்கொள்ளும். இவர்களில் சிலர் உணவு பெட்டியில் சிகரெட்டுகளை வைத்து விநியோகம் செய்வது அண்மயில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை முன்னிட்டு இந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையை சில தரப்பினர் மேற்கொள்வதால் சோதனையை போலீசார் துரிதப்படுத்த உள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அமிட் படோர் தெரிவித்தார்.
அசல் சிகரெட்டுகளின் எண்ணிக்கை சந்தையில் குறைந்துள்ளதால் தற்போது கடத்தல் சிகரெட்டுகளில் தேவை அதிகரித்து வருகிறது. கடத்தல் சிகரெட்டுகளை கொண்டு செல்வதற்கு சிலர் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள உணவு பெட்டிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆகையால் சாலை தடுப்பு சோதனைகளில் உணவு வினியோகஸ்தர்கள் கொண்டு செல்லும் உணவு பெட்டிகளை போலீசார் முழுமையாக சோதனை செய்ய உள்ளதாக புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
உணவு விநியோகஸ்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த உணவு பெட்டியில் சிகரெட்டை கடத்திச்சென்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல் சிகரெட் ஒரு கார்டன் வெ.95க்கு விற்கப்படுவதாக அந்நபர் அந்த காணொளியில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை கருத்தில்கொண்டு போலீசார் துரித சோதனையை மேற்கொள்வர் என அவர் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்