பட்டர்வெர்த், ஏப்.8-
நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள்ள ஆற்றோரத்தில் மது அருந்திக் கொண்டு உல்லாசமாக இருந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் உஜோங் பாத்துவில் போலீசார் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டபோது 21 முதல் 34 வயதுடைய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அங்கு மதுபோதையில் கூடியிருந்தவர்களை போலீசார் வீட்டிற்கு செல்லும்படி எச்சரித்துள்ளனர் ஆனால் அதனையும் பொருட்படுத்தாமல் அவர்கள் அங்கு அமர்ந்திருந்ததால் போலீசார் அவர்களை கைது செய்ததாக வட செபராங் பிறை மாவட்ட போலீஸ் படைத் தலைவர் துணை ஆணையர் நோர்ஜைனி முகமட் நோர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் கல்லூரி மாணவர்கள் ஆவர். சிலர் மீது ஏற்கெனவே பல குற்றப் பதிவுகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த விவகாரம் தொற்றுநோய் கட்டுப்பாட்டு சட்டம் 20 20, செக்ஷன் 21 குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்