img
img

பொருளாதாரத்தை ஊக்குவிக்க வெ.3,500 கோடி -தெங்கு ஸாஃப்ருல்
வியாழன் 09 ஏப்ரல் 2020 11:38:26

img

நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பிரதமர், டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் திங்கள்கிழமை அறிவித்த வெ.1,000 கோடி கூடுதல் தொகை இப்போது மக்கள் நலப் பொருளாதாரத் திட்டத்தை வெ.3,500 கோடியாக உயர்த்தி உள்ளது என்று நிதியமைச்சர், டத்தோஸ்ரீ தெங்கு ஸாஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.

அரசு நிதி மற்றும் உள்நாட்டுக் கடன் வாயிலாக இந்த ஊக்குவிப்பு நிதி வழங்கப்படும்.

இதற்கு முன் மக்கள் நலப் பொருளாதாரத் திட்டத்தை அமல்படுத்தியதில் நாட்டின் பட்ஜெட்டில் 4 விழுக்காடு சரிவு ஏற்பட்டது.

இதில் சிறு, நடுத்தரத் தொழில்துறைகளுக்கான பிரிஹாத்தின் திட்டத்தில் வெ.1,000 கோடி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அதன் ஒட்டுமொத்தத் தொகை வெ.26,000 கோடியானது. இது பட்ஜெட் பற்றாக்குறையை 4.7 விழுக்காடு உயர்த்தும் என்று   டி.வி.3இல் வழங்கிய சிறப்புப் பேட்டியில் டத்தோஸ்ரீ தெங்கு ஸாஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ்  குறிப்பிட்டார்.

போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த கார்

 

கோத்தா பாரு, ஏப்.8-

மாது ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கெரேத்தே போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை 10.15 மணிக்கு நிகழ்ந்த இச்சமபவத்தில் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்த முன்னாள் ராணுவ அதிகாரிக்கு மூக்கு எலும்பு முறிந்ததுடன் முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.

55 வயதுடைய மாது தன் பெரோடுவா மைவி ரகக் காரில் கம்போங் பாசிரிலிருந்து கோக் லானாஸுக்கு சென்று கொண்டிருந்த வழியில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக மாவட்ட போலீஸ் படைத் தலைவர் துணை ஆணையர் அப்துல் ரஹிம் டாவுட் தெரிவித்தார்.

சமிக்ஞை விளக்கில் நின்றுக் கொண்டிருந்த அம்மாது திடீரென காரை முன் நோக்கி செலுத்தியதில் முன்னால் இருந்த மற்றொரு வாகனத்தை மோதியதுடன் போலீஸ் நிலையத்திற்குள் கார் நுழைந்துள்ளது.

இந்த விவகாரம் செக்ஷன் 43(1) போக்குவரத்து சட்டம் 1987இன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img