இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் கடினமான வாரங்கள். இதைக் கடந்து விட்டால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஏற்கெனவே கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் அடுத்தடுத்து வெளிவந்த நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒருவாரமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று இரவு நிலவரப்படி இந்தியாவில் 4281 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று காலை வெளியிட்ட தகவலின்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. 325 பேர் குணமடைந்துள்ளனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்