லண்டன், ஏப். 8-
கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல் நிலை மோசமடைந்து வருவதையடுத்து அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 51 ஆயிரத்திற்கும் மேற்பாட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (வயது 55) கொரோனா பரவியிருந்தது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் எற்படாமல் தற்போது அவரின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது. இதனால், தற்போது அவர் சாதாரண வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்