நாட்டை உலுக்கி வரும் கோவிட் - 19 நச்சுயிரி நோய் உட்பட மக்கள் எதிர்நோக்கி வரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை உடனுக்குடன் நாட்டு மக்களுக்கு செய்தியாக வழங்கி வரும் நாட்டிலுள்ள ஊடகப் பணியாளர்களின் நலனிலும் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என மலேசிய நண்பன் இப்புதிய அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
நாட்டில் கோவிட்- 19 நச்சுயிரி நோய் மோசமான அளவில் பரவியுள்ளதைத் தொடர்ந்து மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதால் அரசாங்க, தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக உள்ளனர்.
ஆனால், முன்னணி பணியாளர்களாக விளங்கி வரும் நாட்டிலுள்ள ஊடகப் பணியாளர்களும் மருத்துவர், தாதியர், போலீஸ், இராணு வத்தினரைப்போல் தொடர்ந்து வேலை செய்து வருவதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின்போது பணியாற்றி வரும் இதர முன்னணி பணியாளர்களுக்கு அரசாங்கம் பல்வேறு ஊக்குவிப்புத் தொகைகள் வழங்கியதைப்போல் இந்நாட்டிலுள்ள ஊடகப் பணியாளர்களுக்கும் அரசாங்கம் சிறப்பு ஊக்குவிப்புத் தொகையினை வழங்க வேண்டும் என மலேசிய மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் என்.ஞானபாஸ்கரன் முன்வைத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.
கோவிட் - 19 தொற்று நோய் மீதான விழிப்புணர்வு, அந்நோயி லிருந்து மக்கள் விடுபடுவதற்கான பல்வேறு தகவல்கள், அரசாங்கம் மக்களுக்கு வழங்கி வரும் பல்வேறு ஊக்குவிப்புத் தொகை உட்பட கோவிட் - 19 நச்சுயிரி நோய்க்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு அதிரடி திட்டங்கள் குறித்து மக்களுக்கு விரிவான முறையில் செய்திகளை வழங்கி வரும் ஊடகப் பணியாளர்களின் சேவையை அரசாங்கம் மதிக்கவும் கௌரவிக்கவும் வேண்டும்.கோவிட் - 19 தொற்று நோய் குறித்து மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கி வருவது உட்பட மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு குறித்து மக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பல்வேறு தகவல்களை வழங்கி வரும் ஊடகத்துறையினரின் சேவை அளப்பரியது.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இதர முனனணி பணியாளர்களைப்போல் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையாற்றி வரும் நாட்டிலுள்ள அரசாங்க, தனியார் ஊடகப் பணியாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்.நாட்டிலுள்ள இதர முன்னணி பணியாளர்களுக்கு அரசாங்கம் 200 வெள்ளி முதல் 600 வெள்ளி வரை சிறப்பு அலவன்ஸ் வழங்கி வருகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்