தங்களின் அந்தரங்க தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டதாக கூறி ஊழல் தடுப்பு ஆணையத்தின் மீதும் அதன் தலைவர் லத்திஃபா கோயா மீதும் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார் முன்னாள் பிரதமர் நஜீப்.
நஜீப்பும் அவரின் மனைவியும் பேசும் உரையாடல்கள் உட்பட மொத்தம் 9 உரையாடல்களை கொண்ட ஒலிநாடாக்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்ததே.
1எம்டிபி ஊழலை மூடி மறைக்க இந்த உரையாடல் நடந்திருக்கிறது என்று லத்திஃபா கூறியிருந்தார். இது தொடர்பில் நஜீப் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருப்பதை அவர்களின் வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா உறுதிப்படுத்தினார்.
தற்போதைக்கு இது ஒரு தலைப்பட்ச வழக்கு என்பதால் இதுபற்றிய முழுவிவரங்களை தம்மால் வழங்க முடியாது என்று அவர் கூறியிருந்தார்.
பிரதமராக இருந்த நஜீப் அவரின் மனைவி ரோஸ்மா, முன்னாள் ஊழல் தடுப்பு ஆணையர் ஸுல்கிப்ளி அமாட் மற்றும் அபுதாபி இளவரசர், பாலிங் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸ் ஆகியோரும் பேசுகின்ற உரையாடல்களைக் கொண்ட அந்த ஒலிநாடாக்களை லத்திஃபா கோயா வெளியிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்