முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் உட்பட மேலும் சில முக்கியப் புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்களை அம்பலப்படுத்தியது தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் லத்தீஃபா கோயா விசாரணைக்கு அழைக்கப்படுவாரென போலீஸ் தெரிவித்துள்ளது.
எம்.ஏ.சி.சி.யிடமிருந்து சம்பந்தப்பட்ட ஒன்பது கோப்புகளை தாங்கள் பெற்றிருப்பதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர் கூறினார்.
அந்த குரல் பதிவுகளின் நம்பகத்தன்மையையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர் என அவர் சொன்னார்.
அந்த குரல் பதிவுகளை யார் செய்தது என்பதை நாங்கள் நிச்சயமாக ஆராய்வோம். அதில் சிக்கல்கள் ஏதும் இருக்குமேயானால் சட்டத்துறை தலைவரின் ஆலோசனை பெறப்படும். அதன் நம்பகத்தன்மையை முதலில் பெறுவது அவசியமாகும் என அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதிகாரப்பூர்வ ரகசியங்களை வெளியிடுவது தொடர்பான பீனல் கோட் சட்டம் பிரிவு 203ஏ மற்றும் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருவரைக் காப்பாற்றுவதற்காக பொய்யான ஆதாரங்களை தயாரிப்பது தொடர்பான பிரிவு 218 ஆகியவற்றின் கீழ் தாங்கள் விசாரணையை மேற்கொண்டிருப்பதாக படோர் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்