கல்வி அமைச்சர் பொறுப்பிலிருந்து மஸ்லீ மாலிக் விலகி உள்ள நேரத்தில் இன்று பிரதமர் துன் மகாதீர் தமது அமைச்சரவையில் சில மாற்றங்களை அறிவிக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் பிரதமர் அறிவிக்கும் இந்த மாற்றத்தில் யார் யார் பதவி பறிக்கப்படும், யார் யார் இலாகா மாற்றப்படும், என்ற கேள்விக்கு விடை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஸ்லீ மாலிக் திடீரென்று பதவி விலகியதை தொடர்ந்து மேலும் பலரின் தலை உருளலாம் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது.
குறிப்பாக இந்த அமைச்சரவை மாற்றத்தில் கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரினா பிந்தி முகமட் ஹருண், சுற்றுலா துறை அமைச்சர் டத்தோ முகமடின் பின் கெத்தாப்பி ஆகியோரும் இடம் பெறலாம் என்றும் பரவலாக யூகிக்கப்பட்டது. அதே நேரத்தில் நிதியமைச்சர் லிம் குவான் எங்கிற்கு சிறப்பு செயலாளராக இருக்கும் டாமன்சாரா தொகுதி எம்பி டோனி புவாவிற்கு இந்த அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்றும் பரவலாக பேசப்படுகிறது.
அதே நேரத்தில் மலேசிய இந்திய சமுதாயத்தில் ஒரு வரலாற்று விடியலை போல பக்காத்தான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட 4 இந்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாறுமா? மாற்றப்படுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
தற்போது மனிதவள அமைச்சராக எம்.குலசேகரனும், இயற்கை நீர் வளத்துறை அமைச்சராக டத்தோ ஸ்ரீ டாக்டர் சேவியர் ஜெயக்குமாரும், பல்லூடக தகவல் தொடர்பு துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும், பிரதமர் துறை அமைச்சராக பி.வேதமூர்த்தியும், கிராம மேம்பாட்டுத்துறை துணை அமைச்சராக ஆர்.சிவராசாவும் பொறுப்பு வகித்து வருகிறார்கள்.
இவர்களின் பதவியில் மாற்றம் வருமா? இலாகா மாற்றம் வருமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று அமைச்சர்கள் அனைவ ரையும் சந்தித்து அவர்களின் சேவை மதிப்பீட்டு அறிக்கையை பிரதமர் பெறுவார் என்று செய்தித்தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டு முடிய இவர்களின் சேவைத்திறன் எந்த அளவு இருந்திருக்கிறது. அமைச்சில் அவர்களின் அடைவு நிலை என்ன? என்பது பற்றிய அறிக்கையை பிரதமர் இன்று பெறுகிறார்.
2 அமைச்சர்களைத் தவிர மற்றவர்கள் தங்கள் சேவை மதிப்பீட்டு அறிக்கையை தந்துவிட்டார்கள்.
இன்று கூடுகின்ற அமைச்சரவையில் மஸ்லீக்கு பதில் கல்வி அமைச்சர் நியமனம் பற்றி துன் மகாதீர் அமைச்சரவையில் பேசுவார்.
அதே நேரத்தில் இரண்டு மூன்று அமைச்சுகளில் மாற்றங்களை செய்வார் என்றும் தகவல் வெளியாகியிருக்கின்றது.
கல்வி அமைச்சராக பிரதமர் யாரை நியமிப்பார் என்று பல்வேறு ஆருடங்கள் நிலவி வந்தன.
முன்னாள் அமைச்சரான டத்தோ முஸ்தாபா முகமட் மற்றும் தற்போதைய கெடா மந்திரி புசாரும் பிரதமரின் புதல்வருமான டத்தோ ஸ்ரீ முக்ரீஸ் மகாதீர் ஆகியோரின் பெயர்கள் பரவலாக அடிபடுகின்றன.
எனினும் அந்த நியமனம் தமது தனிப்பட்ட உரிமைக்குரியது. நானே அந்த முடிவை செய்வேன் என்று பிரதமர் அறிவித்திருக்கிறார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்