இந்திய குடியுரிமை சட்டத்தை விமர்சித்துபேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மலேசிய செம்பனை எண்ணெயை வாங்க வேண்டாம் என இந்திய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த எண்ணெய் சுத்திகரிப்பாளர்களும் வர்த்தகர்களும் மலேசிய செம்பனை எண்ணெயை வாங்கக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தின்ம் எண்ணெய் சார்ந்த துறையினரோடு நடத்தபட்ட ஒரு சந்திப்பில் வாய்மொழி வழியாக இந்த அதிகாரப்பூர்வ மற்ற உத்தரவு விடுக்கப்பட்டதாக செய்தி நிறுவன தகவல்கள் கூறின.
மலேசியாவிடமிருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதியை எப்படி குறைப்பது என்பது குறித்து பேசுவதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
கடந்த 2014 ஆம் ஆண்டுமுதல் மலேசிய செம்பனை எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்கி வருகிறது. கடந்தாண்டு 690 கோடி மதிப்புள்ள செம்பனை எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது.
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் பற்றியும் இந்தியா அண்மையில் கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் பற்றியும் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்த கருத்து இந்திய அரசாங்கத்தை சினமூட்டியுள்ளது. அதையொட்டி இந்த தடையை இந்தியா அமல்படுத்துவதாகத் தெரிகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்