கோலாலம்பூர், ஜன. 18- பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகிறது வர்த்தகம். நம் நாட்டில் கொட்டிக்கிடக்கும் வர்த்தக வாய்ப்புகள் அபரிமிதம். ஆனால், அவற்றை பெறுவதற்கான அணுகு முறைகள் தெரியாமல் பல பெண்கள் இன்னமும் தத்தளிக்கின்றனர். தங்கள் குடும்பத்திற்கு உபரி அல்லது கூடுதல் வருமானம் பெறுவதற்கான வழிகள் இருக்காதா என்று ஏங்கும் பெண்கள் ஏராளம். வீட்டிலிருந்தே வர்த்தகம் செய்யும் முறைகள், அரசு, அரசு சாரா இயக்கங்கள் வழி கிடைக்கும் வர்த்தக தகவல்கள், வாய்ப்புகள், வர்த்தகம் புரிவதற்கான நிதியுதவிகள், சுயமாக சம்பாதிக்கும் வழி முறைகள் என்று பல நிலைகளிலும் நண்பனின் தோழியான உங்களுக்கு வழிகாட்டுவதற்கு தயாராக இருக்கின்றது மலேசிய நண்பன். நாடு தழுவிய நிலையில் மகளிருக்கு உதவும் வண்ணம் சிறப்பு சந்திப்புகளையும், கருத்தரங்கம், கலந்தாய்வுகளையும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தொடக்க கட்டமாக, கோலாலம்பூர், சிலாங்கூர் மாநில மகளிருக்காக வரும் மார்ச் 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் கருத்தரங்கம், சந்திப்பு அங்கம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த ஒரு நாள் கருத்தரங்கில் கலந்து பயன்பெற மகளிர் அழைக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே இருப்பதால் முதலில் வருவோருக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படும். ஆகவே, எங்களுடன் தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளும்படி மகளிர் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அல்லது கீழ்க்காணும் கூப்பன்களை நீங்கள் பூர்த்தி செய்தும் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். தொலைநகல் வழியாகவும் கூப்பன்களை அனுப்பி வைக்கலாம். நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் 03-62515981 / தொலைநகல் எண் 03-62591617. மலேசிய நண்பன் அலுவலகத்தில் இளவரசி அல்லது ராஜேஸ்வரியுடன் தொடர்பு கொள்ளலாம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்