உணவகங்கள் உட்பட அனைத்து தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் புகை பிடிக்க விதிக்கப்பட்டிருக்கும் தடை நாளை ஜனவரி முதல் தேதியில் இருந்து முழுமையாக அமலுக்கு வருகிறது என்றும் இந்த இடங்களில் புகை பிடிப்போருக்கு 250 வெள்ளி சமாதான அபராதம் (கம்பவுண்ட்) விதிக்கப்படும் என்றும் சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
எனினும், முதல் தடவையாக குற்றம் புரிவோர் அபராத அறிவிக்கை வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் ஏதாவது ஒரு மாவட்ட சுகாதார அலுவலகத்தில் அபராதம் செலுத்திவிட்டால், அந்த தொகையை 150 வெள்ளியாக குறைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இரண்டாவது குற்றத்திற்கு அபராத தொகை குறைக்கப்படாது என்றும் 250 வெள்ளியை முழுமையாக செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மூன்றாவது மற்றும் அடுத்தடுத்து குற்றம் புரிவோருக்கு அதிகபட்ச அபராதத் தொகையான 350 வெள்ளி விதிக்கப்படும்.
உணவக உரிமையாளர்கள் தங்களுடைய கடைகளில் புகை பிடிக்கப்படாததை உறுதி செய்ய வேண்டும். சிகரெட் சாம்பல் தட்டுகள், ஷிஷா சேவைகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கும் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.
ஜனவரி முதல் தேதியில் இருந்து, உணவக உரிமையாளர்களுக்கும் முதலாவது மற்றும் இரண்டாவது குற்றங்களுக்காக 250 வெள்ளி விதிக்கப்படும். அதே வேளையில் மூன்றாவது மற்றும் அடுத்தடுத்த குற்றங்களுக்கு 350 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்" என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்