சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாகிர் நாயக் இஸ்லாமிய உலகில் ஓர் அடையாளச் சின்னம் என்று பல்கலைக்கழக தேர்வுத் தாளில் இடம்பெறச் செய்திருப்பதை மஇகா கடுமையாக ஆட்சேபிப்பதாக அதன் உதவித் தலைவர் சிவராஜ் சந்திரன் தெரிவித்தார்.
மாறுபட்ட இனங்கள் வாழும் இந்த நாட்டில் ஒரு தேர்வுத் தாளில் இதை இடம்பெறச் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று அவர் வினவினார். இனங்களுக்கிடையில் இன, சமய புரிந்துணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய நேரத்தில் இது அவசியமா என்று அவர் வினவினார்.
அந்த கேள்வி கீழ்க்கண்டவாறு இடம்பெறுகிறது:
ஸாகிர் நாயக் இஸலாமிய உலகின் போற்றுதலுக்குரிய ஒரு மனிதராக விளங்குகிறார். உண்மையான இஸ்லாத்தை பரப்புவதில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அவரிடம் எழுப்பப்படும் எந்த ஒரு கேள்விக்கும் அவரால் பதில் தரமுடியும். ஆனால் மலேசியாவில் அவர் சமய போதனை நடத்தக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. மலேசியர் என்ற அடிப்படையில் உங்கள் கருத்து என்ன? ஏன் இது நிகழ்கிறது?
இவ்வாறு அந்த கேள்வி அமைந்துள்ளது. மேலும் இதற்கு விடையளிக்க மாணவர்களுக்கு 4 அம்சங்கள் தரப்பட்டுள்ளன.
1. மலேசியர்கள் தகவல்களை பெறுவதில் அக்கறை கொள்வதில்லை.
2. மலேசியர்கள் காரணமே இல்லாமல் உணர்ச்சிவயப்படுகிறார்கள். பயப்படுகிறார்கள்.
3. மலேசியர்கள் எதையும் ஆராயாமல் ஒரு கூட்டம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்றுகிறார்கள்.
4. மலேசியர்கள் தங்கள் சொந்த சமயத்தைப் பற்றி அறியாமையில் இருக்கிறார்கள்.
இதுதான் அந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு வினாத்தாளில் எழுப்பப்பட்டுள்ள கேள்வியாகும். இதை மஇகா ஆட்சேபிப்பதாக யுவராஜ் கூறுகிறார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்