நாளை ஜனவரி முதலாம் தேதி தொடங்கப்படவிருந்த பெட்ரோல் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை ஒத்திவைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
புதிய தேதியை அரசாங்கம் அறிவிக்கும் வரை இத்திட்டம் ஒத்தி வைக்கப்டும் என்று உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
நாட்டு மக்கள் இத்திட்டம் குறித்து நன்கு புரிந்து கொள்வதற்கும் அவர்களுக்கு போதுமான அளவில் விளக்கங்கள் அளிப்பதற்கும் நிதி அமைச்சிடமிருந்து எம்40 தரப்பினரைச் சேர்த்து கொள்வதற்கும் இத்திட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.
பெட்ரோல் உதவித் தொகை திட்டம் குறித்து அரசாங்கம் புதிதாக அறிவிப்பு செய்யும் வரை நாட்டு மக்கள் தொடர்ந்து நடப்பிலுள்ள விலையில் பெட்ரோலைப் பெறுவார்கள் என்றார்.
நம்பிக்கைக் கூட்டணியின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 240 கோடி வெள்ளி செலவிலான இத்திட்டம் அடுத்தாண்டு அமல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
மக்களின் வாழ்க்கைச் செலவினம் தற்போது அதிகரித்து வந்துள்ளதால் இத்திட்டத்தினால் பி40 மற்றும் எம்40 தரப்பினரைச் சேர்ந்த சுமார் 80 லட்சம் பேர் பயனடைவர்.
தற்போது பெட்ரோல் ரோன் 95 லிட்டருக்கு 2 வெள்ளி 8 காசாகவும் டீசல் லிட்டருக்கு 2 வெள்ளி 18 காசாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்