பெர்லிஸ் மலேசிய பல்கலைக்கழகத்தில் முதல் பருவத்தில் பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வுத் தாளில் இந்தியர்களை இழிவு படுத்தும் வகையில் அமைந்துள்ள கேள்விகள் ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தினரிடையே சினத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்தேர்வுத் தாளின் எட்டாவது பக்கத்தில் ஒரு நிழற்படத்தின் கீழே இப்படி ஒரு கேள்வி அமைந்துள்ளது:-
இந்த இனத்தவர்கள் கருமையான சருமத்தைக் கொண்டவர்கள். மற்றும், மலேசியா, இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளில் இவர்களைக் காண முடியும். இந்த இனத்தவர்கள் யார்?
ஏ. நீக்ரோக்கள்
பி. செவ்விந்தியர்
சி. இந்தியர்
டி. புஷ்மென்
இவ்வாறு அக்கேள்வி அமைந்துள்ளது. இது அந்த பக்கத்தின் 12 ஆவது கேள்வியாகும்.
இந்தியர்களைத் தாழ்வுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட கேள்விகளை தேர்வுக்கு அனுமதித்த உயர் கல்விக் கூடமாக கருதப்படும் பெர்லிஸ் மலேசிய பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என முன்னாள் தலைமையாசிரியர்களான சிரம்பானைச் சேர்ந்த இராமசாமியும் ஈப்போவைச் சேர்ந்த ஜேம்ஸ் இரத்தினமும் தெரிவித்தனர்.
நாட்டுக்கு பண்புள்ள நல்ல குடிமக்களை உருவாக்கும் இடமாக கருதப்படும் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட ஓர் இனத்தவரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள கேள்விகளை எவ்வாறு தேர்வு வாரியக் குழுவினர் அனுமதித்தனர் என முன்னாள் தலைமையாசிரியர்களான தெலுக் இந்தானைச் சேர்ந்த ஜெயராமனும் சிலிம் ரிவரைச் சேர்ந்த ஆர்.சுந்தரமும் கேள்வி எழுப்பினர்.
பட்டதாரிகளை உருவாக்கும் களமாக விளங்கும் பல்கலைக் கழகம் இத்தகைய நடவடிக்கையினால் அதன் தரத்தையே தாழ்த்திக் கொண்டதாகக் கூறினர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்