அல்தான் துயாவை படுகொலை செய்யுமாறு முன்னாள் பிரதமர் நஜீப் தமக்கு உத்தரவு பிறப்பித்தார் என்று கொலைக் கைதியான அஸிலா ஹட்ரி தெரிவித்துள்ள தகவல் தொடர்பில் காவல்துறை பலரிடம் விசாரணை நடத்தும் என ஐஜிபி டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் கூறினார்.
இவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும். அஸிலா வெளியிட்ட சத்தியப் பிரமாண வாக்குமூலத்தைப் பற்றி விசராணை நடத்த வேண்டியது எங்கள் கடமையாகும் என்றார் அவர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி தம்மை வரவழைத்த நஜீப், அல்தான்துயா சோவியத் உளவாளி, அவர் நாட்டில் இருப்பது ஆபத்து. எனவே அவரை கொலை செய்து தடயம் தெரியாமல் அழித்துவிடுங்கள் என்று கூறினார் என அஸிலா கூறியிருந்தார்.
அவரது இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஓர் அபாண்டம். என் மீது சுமத்தப்படும் ஒரு கொலைப்பழி என நஜீப் கூறியதோடு அப்படி ஒன்றை நான் சொல்லவே இல்லை என்று பள்ளிவாசலில் சத்தியமும் செய்திருக்கிறார்.
நேற்று, தொடர்ந்து பேசிய ஐஜிபி இந்த விசாரணையை நடத்த எங்களுக்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன. எனினும் சட்டத்துறை அலுவலகத்தின் வழிகாட்டுதலோடு இதனை மேற்கொள்வோம் என்றார்.
முதலில் யாரை அழைக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை வகுத்திருக்கிறோம். அவர்களை அழைத்து வாக்குமூலம் பெறுவோம் என்றார் அவர்.
இந்த விசாரணையின் ஓர் அங்கமாக நஜீப் அழைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்