அன்வாருக்கு எதிரான பாலியல் விவகாரத்தில் அன்றைய தினம் அவர் எங்கிருந்தார் என்பது தொடர்பான விவரங்களை காவல்துறை விசாரிக்க விரும்புவதாக ஐஜிபி டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் கூறினார்.
தமது சத்தியப்பிரமாண வாக்குமூலத்தில் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக யூசுப் ராவுத்தர் கூறியிருக்கிறார். அப்போது அது போர்ட்டிக்சன் இடைத்தேர்தல் நேரம்.
சிலர் அவர் இங்கிருந்தார் என்கிறார்கள். வேறு சிலர் அங்கிருந்தார் என்கிறார்கள். அவர் எங்கிருந்தார் என்பதை நாங்கள் எங்கள் விசாரணையின் மூலம் கண்டுபிடிப்போம் என்றார் அவர்.
அன்வார் தம்மிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். பாலியல் தொல்லைகள் தந்து தம்மை மானபங்கம் செய்தார் என்று யூசுப் ராவுத்தர் கூறி வரும் குற்றச்சாட்டு குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அவர் செய்த புகாரை அடுத்து 3 முறை விசாரணைக்கு அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதோடு உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது.
சிகாம்புட்டில் உள்ள அன்வார் இல்லத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது. அன்வார் இதை மறுத்து வருகிறார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்