இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்ற சமயப்போதகர் ஸம்ரி விநோத்தின் நிந்தனையான கூற்று தொடர்பில் நடப்பு அரசாங்கத்தில் அமைச்சர்களாக பொறுப்பு வகித்துவரும் இந்தியர்கள் உட்பட அனைவரும் தங்களின் ஆட்சேபத்தை வெளிப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, ஒற்றுமைத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இவ்விவகாரத்தில் அமைதி காப்பதுபோல் ம.இ.கா ஒரு போதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என ம.இ.கா. தேசிய உதவித்தலைவரான செனட்டர் டி.மோகன் கூறியுள்ளார்.
தமிழ்ப்பள்ளிகளை மூடிட நினைக்கும் கோமாளிகளின் எண்ணம் ம.இ.கா இருக்கும் வரை எந்தக் காலத்திலும் ஒருபோதும் நிறைவேறாது என்றார் அவர்.
நேற்று காலை இங்கு பந்திங் ஸ்ரீமகா மாரியம்மன் தேவஸ்தான கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட செனட்டர் மோகன் பிறகு செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
இந்நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளை எதிர்காலத்தில் மூடப்படக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலை ஏற்படுமானால் அதற்கு நாம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.
காரணம் நம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பி வைக்காமல் வேற்று மொழிப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் நிலையில் இது சாத்தியமாகும். எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகள் இந்நாட்டில் நிலைத்து நிற்க கை கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ம.இ.கா கோலலங்காட் தொகுதி இளைஞர் பகுதி மற்றும் கல்விப் பிரிவு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய அவர், சொஸ்மா எனும் அவசர கால சட்டத்தை அரசியல் நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்திவரும் நடப்பு அரசாங்கம் நாட்டில் உள்ள இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கும் ஸம்ரி போன்ற பலருக்கு எதிராகவும் இச்சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என தாம் வலியுறுத்துவதாகக் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்