கேமரன் மலையில் நாற்பது ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் இந்தியர்களின் நிலங்களை பறிப்பதற்கான நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலும், அவர்களுக்கு மாற்று நிலங்கள் வழங்கப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரம்லி நோர் உடனடியாக இந்நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ம.இ.கா தேசிய தகவல் பிரிவுத்தலைவர் வே.குணாளன் கூறினார்.
தற்போது பகாங் மாநில அரசாங்கம் இங்குள்ள பலருக்கும் புதிய நிலங்களை வழங்கி வரும் நிலையில், சுமார் 40 முதல் 50 ஆண்டுகளாக 240 ஏக்கர் நிலத்தில் காய்கறிகளை விவசாயம் செய்து வரும் கோல தெர்லாவைச் சேர்ந்த 60 விவசாயிகளின் நிலங்களைப் பறிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு காரணங்களும் கூறப்பட்டு வருகின்றன. ஆனால், அவர்களுக்கு மாற்று நிலங்களை வழங்குவது பற்றி பேசப்படவில்லை.
கேமரன் மலை இடைத்தேர்தலின் போது ம.இ.கா.விற்குச் சொந்தமான அத்தொகுதியை இரவலாகப் பெற்று வெற்றி பெற்ற ரம்லி, இப்பகுதி வாழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மாநில மந்திரி புசாரின் வாயிலாகத் தீர்வு காண வழங்கப்பட்ட வாக்குறுதி என்னவானது என குணாளன் கேள்வி எழுப்பினார்.
கேமரன் மலை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற நாளிலிருந்து அங்குள்ள மக்களை இன்று வரை சந்திக்காமல் இருந்து வரும் ரம்லி நோர், முதலில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஒரு நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த அறுபது விவசாயிகள் உட்பட கேமரன் மலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் அடங்கும் மகஜர் ஒன்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயிலிடம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்