வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

மாணவர்களின் பதிவு குறைகிறது: தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்து?
திங்கள் 23 டிசம்பர் 2019 08:35:38

img

நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் ஆசிரியர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதே சமயம், 2020 இல் தமிழ்ப்பள்ளிகளின் நிலைமை என்னவாகும் என்ற அச்சம் பலரிடையே நிலவுகிறது.

குறிப்பாக, தோட்டப்புறங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்து வரலாம் என்னும் அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மலேசிய நண்பன் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.

பேராவிலுள்ள பெரும்பாலான தோட்டப்புறப் தமிழ்ப் பள்ளிகளில் எதிர்வரும் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் பதிவு திருப்தியளிக்கும் வகையில் இல்லை என தெரிய வருகிறது.

வரும் 27 ஆம் தேதி முதல் பள்ளிகளில் முதலாம் ஆண்டிற்கான மறுபதிவுகள் நடந்த பிறகே உண்மையான மாணவர் எண்ணிக்கையை அறிய முடியும் என்றாலும் இதுவரை நடந்துள்ள பதிவுகள் மிகவும் கவலையளிக்கும் நிலையிலேயே உள்ளன.

பத்தாங் பாடாங் மாவட்டத்தில் 12 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 9 தோட்டப்புறப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர் எண்ணிக்கை மிகவும் சரிவு கண்டுள்ளதாகத் தெரிகிறது.

கிளாப்பாபாலி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இதுவரை முதலாம் ஆண்டுக்கு ஒரு மாணவர் கூட பதிவு செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.

 அருகிலுள்ள பேராங் ரிவர் மற்றும் குளுனி தோட்டத் தமிழ்ப் பள்ளிகளில் ஒரேயொரு மாணவர் மட்டுமே பதிந்துள்ளது எதிர்காலத்தில் தமிழ்ப் பள்ளிகளின் நிலை குறித்து மிகவும் சிந்திக்க வைக்கிறது.

அப்பள்ளிகளைத் தவிர்த்து துரோலாக், சுங்கை குரூட், தொங் வா, செண்டிரியாங், சுங்கை தோட்டம், பீக்கம் தோட்டப் பள்ளிகளில் நான்கு அல்லது ஐந்து மாணவர்கள்  மட்டுமே பதிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.

தஞ்சோங் மாலிம் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், சிலிம் ரிவர், சிலிம் வில்லேஜ், சுங்கை, பீடோர், தாப்பா, தாப்பாரோடு போன்ற பட்டணப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை திருப்தியளிக்கும் வகையில் இருந்தாலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் சரிவு கண்டுள்ளதாகவே அறிய வருகிறது.

பெரும்பாலான பட்டணப் பள்ளிகளில் பாலர் பள்ளிகள் இருப்பதால் 20 லிருந்து 35, 40 மாணவர்கள் வரை  பதிவு செய்துள்ளனர். இந்திய சமூகத்தினரின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாலும் இன்னமும் ஒரு சிலர் பிறமொழிப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்வதாலும் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் பதிவு குறைந்து வருகிறது எனலாம்.

பேரா மாநிலத்தில் மொத்தம் 134 தேசிய வகை தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றுள்: பத்தாங் பாடாங் மாவட்டத்தில் 12 தமிழ்ப்பள்ளிகளும் மஞ்சோங் மாவட்டத்தில் 15 தமிழ்ப்பள்ளிகள், கிந்தா (17), கெரியான் (14), கோலகங்சார் (12), ஹிலிர் பேரா (12), லாருட் மாத்தாங், செலாமா (17), உலு பேரா (3), பேரா தெங்கா (3), கம்பார் (6), முவாலிம் (7) மற்றும் பாகான் டத்தோ மாவட்டத்தில் 16 தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img