தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் சமயத்தால் வேறுபட்டி ருந்தாலும் கிறிஸ்துவ, இஸ்லாமிய மாணவர்களும் குறைந்த எண்ணிக்கையில் சேர்ந்து பல்லாண்டு களாக படித்து வருகிறார்கள். படித்து வருவதை இந்த நாடே அறியும். உண்மைகள் இப்படியிருக்க தமிழ்ப் பள்ளிகளில் இந்து சமயக் கல்வியை கட்டாயப் பாடமாக்க கோரிக்கை வைப்பது அறிவு பூர்வமானதாகவும் நியாயமானதாகவும் தெரியவில்லை . சமயக் கல்வியை அறிமுகப்படுத்து வதற்கு முன் சில சட்டப் பிரச்சினை களை கவனத்தில் கொள்வது நல்லது.
மலேசியா மதச் சார்பற்ற நாடு. அதுபோலவே மெர்டேகா ஒப்பந்தமுமாகும். கூட்டரசு அரசியல் சாசனம் மிகுந்த கவனத்துடன், சிந்திக்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு பத்திரமாகும். 1956 இல் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் நாட்டின் சுதந்திரத்திற்காக பேச்சுவார்த்தை நடத்த மெர்டேகா தூதுக் குழுவுக்கு தலைமையேற்று லண்டனுக்குச் சென்றார். அந்த பேச்சு வார்த்தைகளில் மலாய் ஆட்சியாளர்களின் நான்கு பேராளர்களும் அன்றைய கூட்டணி அரசாங்கத்தின் நான்கு பேராளர்களும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பேராளர்களும் கலந்து கொண்டனர்.
சுதந்திர மலாயாவுக்கு அரசியல் சாசனத்தை வரைய ரீட் கமிஷன் அப்போது நியமிக்கப்பட்டது. அந்த கமிஷன் மலாயாவில் 118 கூட்டங் களை நடத்தியது. நாட்டின் பல தரப்பு மக்களையும் அமைப்புகளையும் சந்தித்து 131 மகஜர்களை பெற்றது.
அன்றைய கூட்டணி கட்சி சமர்ப்பித்த மகஜரில் இடம் பெற்றுள்ள ஆலோசனைகளின் விளைவே அந்த நல்லிணக்கங்களாகும்.
மலாயாவில் சமயம் இஸ்லாமாக இருக்கலாம். இந்தக் கோட்பாடு கடைபிடிக்கப்படும் போது முஸ்லிம் அல்லாதவர்கள் கடைபிடிக்கும் சொந்த மதங்களுக்கு விரோதமான சூழ்நிலையை அது புகுத்தக் கூடாது. அது போலவே தமிழ்ப்பள்ளிகளில் இந்து சமயக் கல்வி கட்டாயப் பாடமாக்கக் கூடாது.
கூட்டணி கட்சி, மலாயா ஒரு மதச் சார்பற்ற நாடு என்பதை தொடர்ந்து நிலைநாட்டி வந்தது. அதைத் தொடர்ந்து 1957 ஜூன் மாதத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மலாயா கூட்டரசு ஒரு மதச் சார்பற்ற நாடு என்ற நடப்பு நிலை வகையிலும் பாதிக்கக் கூடாது என்பதை அந்த வெள்ளை அறிக்கை உறுதிப்படுத்தியது.
அதன் பின்னர் துங்கு அப்துல் ரஹ்மானும் மதிப்புமிக்க கல்வி மான்களும் நம் நாட்டின் உச்ச நீதிமன்றமும் 1988 இல் நமது நாடு மதச் சார்பற்ற நாடு என்பதனையும் இஸ்லாமிய நாடு அல்ல என்பதையும் வலியுறுத்துகிறது. கடந்த 40 ஆண்டுகளாக (2001 வரை) யாரும் மலேசியாவை ஒரு இஸ்லாமிய நாடாக முன் மொழிந்ததில்லை என்று வழக்கறிஞர் மன்றம் தமது அறிக்கையை பத்திரிகை மூலமாக மக்களுக்கு அறிவிப்பு செய்திருக்கிறது.
உண்மைகள் இப்படியிருக்க, தமிழ்ப்பள்ளிகளில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினருக்கும் அதிகமான மாணவர்கள் இந்துக்கள் என மலேசிய இந்து தர்ம மாமன்ற அறிக்கையில் (பத்திரிகை செய்தியில்) காணப்படுகின்றது. மீதமுள்ள 20 விழுக்காட்டினர் எந்த சமயத்தை சார்ந்தவர்கள் என விளக்கம் தரவில்லை. தமிழ்ப்பள்ளிகளில் 80 விழுக்காட்டினர் தமிழ் மாணவர்கள் படிப்பதால் அவர்களுக்கு இந்து சமயக் கல்வி கட்டாயப் பாடமாக்க வேண்டுமென அறிக்கை வெளியிடும் மலேசிய இந்து தர்ம மாமன்றம் தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் தமிழ் மாணவர்களை தவிர்த்து மற்ற சமூக தமிழ் மாணவர்கள் எந்த சமய நூலை படிக்க வேண்டுமென கோரிக்கைகளை முன்வைக்க தயங்குவது ஏன்?
தமிழ்ப்பள்ளிகளில் இந்து சமயக் கல்வி கட்டாயப் பாடமாக்க கோரிக்கை வைக்கும் மலேசிய இந்து தர்ம மாமன்ற பொறுப்பாளர்கள் தமிழ்ச் சமூகத்துக்கு வழிகாட்டியாகவும் ஒழுக்க நெறிமுறைகளை, பண்பாட்டுக் கொள்கைகளை எடுத்துரைக்கும் திருக்குறளை முன் வைக்காதது ஏன்? தமிழ்ப்பள்ளிகளில் போதிக்க ஏன் முன்வருவதில்லை ? திருக்குறளின் பெருமைகளை சற்று உற்று நோக்குவோம். பல நூற்றாண்டு களுக்கு முன்னர் தோன்றிய திருக்குறளில் இன்றைய கல்விச் சிந்தனையாளர்களின் கருத்துகள் எவ்வாறு உள்வாங்கப்பட்டுள்ளது என்பதை இந்நூல் அழகுற எடுத்துக் காட்டுகின்றது.
இன்று யுனெஸ்கோ அறிக்கையில் முன்வைக்கப்பட்ட கல்வியின் தூண்களாக அறிதலுக்காக கற்றல் எனும் விடயம் திருக்குறளில் கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை எனும் அதிகாரங்களில் முன்வைக்கப் பட்டுள்ளதையும் செயலாற்றலுக்காக கற்றல் எனும் இரண்டாவது விடயம் திருக்குறளில் வினைநுட்பம், காலமறிதல், வினைசெயல்வகை போன்ற அதிகாரங்களில் வெளிக்கொணர்ந்துள்ளது பற்றியும் சேர்ந்து வாழக் கற்றல் எனும் மூன்றாவது விடயம் திருக்குறளில் வாழ்க்கை துணை நலம், இல்லறம், மக்கள் பேறு, அன்புடைமை முதலிய அதிகாரங்களில் வெளிக் கொணர்ந்துள்ளது பற்றியும் வாழ்வதற்காக கற்றல் எனும் நான்காவது விடயம் மக்கட் பண்பு நலம் எனும் அதிகாரத்தில் எவ்வாறு சிறப்பாக கொணர்ந்துள்ளது என்பது பற்றியும் ஆய்வு நிலையில் நின்று வெளிப்படுத்தி யிருப்பது சிறப்பானதாகும்.
இங்கு சமூக மாற்றச் சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள் மாற்றுக் கல்விக்கான சிந்தனையை முன் வைத்தார்கள். அத்தகைய தமிழியல் சூழலில், புதிய சிந்தனைக்கான அடித்தளம் திருக்குறளில் இருப்பதை நாம் காணமுடிகிறது.
திருக்குறளின் பெருமை : திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூலாகும். திருக்குறள் அயற்கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி எந்த ஓர் அயற் கொள்கைகளையும் உடன்பட்டு கூறும் நூலன்று. தமிழர் வாழ்வே என்னும் இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள். உள்ளதை உள்ளபடியே உயரிய முறையில் எடுத்துரைக்கும் உண்மை நூல். தமிழர் வாழ்வின் படப்பிடிப்பு! பழந்தமிழர் நாகரிக வாழ்வை அப்படியே நமக்குக் களங்கமற்று காட்டும் காலக் கண்ணாடி! தொன்மையும் எதிர்மறையும் ஒருங்கொப்ப காட்டும் தொலை நோக்காடி! தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்டம்! தமிழ் மக்களுக்கு வள்ளுவர் வகுத்தமைத்து வைத்த பாதுகாப்புப்படை! ஏன்? தமிழர் களுக்கு மட்டுமின்றி, குறள் உலகப் பொதுநூல்! மக்கட் பண்பாட்டுச் சரக்கறை! எக்காலத்துக்கும் உரிய நூல்! இறவா நூல்! காலங்கடந்த நூல்! எனல் மிகையாகாது. ’அகர முதல’ எனத் தமிழ் மொழியின் முதலெழுத்தில் தொடங்கி ’பெறின்’ என ஈற்றெழுத்தில் முடிவதால், தமிழ் மொழியே திருக்குறள் என்னும் குறிப்புப் பொருளுங் கொள்க.
மலேசியா மதச் சார்பற்ற நாடு என்பதை நமது அரசியல் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மதச் சார்பற்ற கொள்கைக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளியில் இந்து சமயக் கல்வி கட்டாயப் பாடமாக்கவேண்டுமென கோரிக்கை வைப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மாறாக, தமிழ்ச் சமூகத்தினரால் போற்றப்படும் ’திருக்குறளை தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் ஒரு குறளை பயிற்றுவிக்க வழிவகை செய்தால், மாணவர்கள் பண்புள்ளவர்களாகவும் நேர்மையாளர்களாகவும் மனதை ஒருநிலைப் படுத்தி வைக்கவும், சமூகத்தில் மதிக்கத் தக்க மனிதர்களாகவும் உருவாக திருக்குறள் வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணமாகும்.
மனம் இனிக்க பொங்கல், மனை சிறக்க மஞ்சள், நலம் சிறக்க கரும்பு
மேலும்’திருக்குறளை தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் ஒரு
மேலும்நீயும், உன் குடும்பத்தினரும் தான் குரங்கிலிருந்து வந்தவர்கள்
மேலும்கும்பகோணத்திலிருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது கோவிந்தபுரம்.
மேலும்