மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயாவை கொலை செய்ய நான் ஆணையிட வில்லை என்று முன்னாள் பிரதமர் நஜீப் துன் அப்துல் ரசாக் நேற்று இங்கு கம்போங் பாருவில் உள்ள பள்ளி வாசலில் சத்தியம் செய்தார்.
நேற்றைய ஆங்கில தேதி மற்றும் இஸ்லாமிய வருடத் தேதியை குறிப்பிட்டு கையை உயர்த்தி நஜீப் துன் அப்துல் ரசாக்காகிய நான் மங்கோலிய நாட்டு பிரஜையான அல்தான் துயா ஷாரிபு என்பவரை கொலை செய்யுமாறு யாருக்கும் உத்தரவிடவில்லை. இந்த கொலைக்கு யாரையும் அமர்த்தவில்லை என்று சத்தியம் செய்கிறேன் என்றார்.
அப்படி ஒருவரை நான் சந்தித்தது இல்லை. அவர் யார் என்று எனக்குத் தெரியாது. அவரது பெயரும் எனக்குத் தெரியாது. இது பொய்யானால் இறைவன் என்னைத் தண்டிக்கட்டும். இல்லை என்றால் இதை சொன்னவர்களை தண்டிக்கட்டும் என்று அவர் கூறிய போது அவருக்கு ஆதரவாக அருகில் இருந்தவர்கள் குரல் எழுப்பினர். நஜீப்புடன் அவரின் மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா அவரது பிள்ளைகள் டத்தோ முகமட் நஸிபுடின் நஜீப், நூர்யானா நஜ்வா ஆகியோரும் இருந்தனர்.
மேலும் முன்னாள் துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியும் உடன் இருந்தார். இந்த சத்தியத்திற்கு பிறகு பிற்பகல் 2.38மணியளவில் அனைவரும் மதிய உணவிற்காக கலைந்து சென்றனர்.
கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அவரது இந்த சத்திய சடங்கை கண்டனர். கம்போங் பாரு ஜாமிக் பள்ளி வாசலில் இந்த சடங்கு நடந்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்