இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தில் திட்டமிட்டு முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏன் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கேள்வி எழுப்பினார்.
இந்திய நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இந்த குடியுரிமை சட்டம் குறித்து தமது ஆச்சரியத்தையும் கவலையையும் அவர் வெளிப்படுத்தினார்.
பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்கள் இயல்பாகவே இந்திய பிரஜைகளாகவே அண்மையில் இந்திய அரசாங்கம் இந்த சட்டத்தை கொண்டு வந்தது.
தற்போது இந்த சட்டத்தை எதிர்த்து இந்தியாவிலேயே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.
இந்த நாட்டுக்கு வந்த இந்தியர்களை நாம் ஏற்றுக் கொண்டோம். தகுதி இல்லாத நிலையிலும் கூட சீனர்களுக்கு நாம் குடியுரிமை தந்தோம். இன்று அரசாங்கத்தில் கூட அவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியாவிலோ முஸ்லிம்களுக்கான குடியுரிமை மறுக்கப்படுகிறது.
இதையெல்லாம் கண்டிப்பாக நாம் செய்ய மாட்டோம். அப்படி செய்தால் இங்கே பெரும் குழப்பம் மூளும். இதனால் எல்லோருக்கும் பாதிப்பு வரும்.
இந்தியாவில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தினால் மரணங்கள் ஏற்படும் அளவிற்கு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் மற்றவர்களோடு எந்த பிரச்சினையும் இல்லாமல் அவர்கள் வாழும் போது இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று அவர் வினவினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்