தமிழ்- சீனப்பள்ளிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் அரசாங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் வாதாடுவார்கள் என நேற்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.
தாய் மொழிப்பள்ளிகளை நிலை நிறுத்தும் வகையில் நாட்டின் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திலிருந்து வழக்கறிஞர்கள் அமர்த்தப்பட்டு இதை எதிர்த்து அவர்கள் வழக்காடுவார்கள் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் நேற்று கூறினார்.
நாட்டில் இயங்கி வரும் தமிழ்- சீனப்பள்ளிகள் அரசியலமைப்பு சட்டத்தின் 152(1) என்ற பிரிவின் கீழ் முரடானவை என்றும் அதை மூடப்பட வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் இரண்டு அரசு சார்பற்ற அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளன.
ஏற்கெனவே வழக்கறிஞர் முகமட் கைருல் அஸாம் அப்துல் அஜிஸ் என்பவர் தொடுத்த வழக்கை கூட்டரசு நீதிமன்றம் கடந்த நவம்பர் 11 ஆம் தேதிக்குப் பிறகு தள்ளுபடி செய்து விட்டது. எனினும் அதை எதிர்த்து அவரும் மேல் முறையீடு செய்திருக்கிறார்.
தமிழ்- சீனப்பள்ளிகள் அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. நீண்டகாலமாக தாய் மொழிப்பள்ளிகளாக நாட்டில் இயங்கி வருகின்றன.
அவற்றை நிலை நிறுத்த அரசாங்கம் போராடும். இந்த பள்ளிகள் இருப்பது சட்டத்திற்கு முரணானது என்று சில தரப்பினர் இப்போது சர்ச்சையாக்கி வருகின்றனர்.
எனினும் அத்தகைய தரப்பினரின் முயற்சிகள் ஒரு போதும் வெற்றி அடையாது என்று அமைச்சர் எம்.குலசேகரன் சூளுரைத்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்