அல்தான்துயா கொலையாளி அஸிலா ஹட்ரி வெளியிட்டுள்ள சத்தியப்பிரமாண வாக்குமூலம் தொடர்பாக புதிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென மலேசிய வழக்கறிஞர் மன்றமும் நேற்று கேட்டுக்கொண்டது.
அவர் வெளியிட்டுள்ள இந்த அதிரடியான குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சியளிப்பது மட்டுமல்ல. அதில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றவர்களின் தகவல்களும் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மேலும் இதில் மலேசிய நீதித் துறையின் மீதான மதிப்பீடும் சம்பந்தப்பட்டிருப்பதால் உடனடியாக இந்த விசாரணை தொடங்கபட வேண்டும் என அந்த மன்றத்தின் தலைவர் அப்துல் ஃபாரிட் அப்துல் காபூர் கூறினார்.
இந்த சம்பவம் முழுவதிலும் நிறைய மர்மங்கள் இருப்பது போலத் தெரிகிறது. பெரும்பாலும் ஒரு குற்றவியல் புலன் விசாரணைக்கு காலக்கெடு ஏதுமில்லை. இந்த விஷயத்தில் உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும்.
இதில் இனியும் மூடிமறைப்பு வேலைகள் நடக்கக்கூடாது. ஆதாரங்களை மறைக்கின்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றார் அவர். இந்தக் கொடூரமான குற்றம் தொடர்பில் எல்லாத் தகவல்களும் தீர ஆராயப்பட வேண்டும்.
நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்பட வேண்டும். கேள்விகளும் சந்தேகங்களும் எழக்கூடாது. சந்தேகத்திற்கு இடமில்லாமல் இந்தக் கொலைக்குத் தகுந்த தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்