img
img

சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கு தற்காலிக பெர்மிட் - அரசாங்கம் அனுமதி
புதன் 18 ஜனவரி 2017 10:11:57

img

கோலாலம்பூர், ஜன. 18- நாட்டில் சட்டவிரோதமாக வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளர்களுக்கு தற்காலிக வேலை பெர்மிட்டை வழங்குவதற்கு அரசாங்கம் நேற்று இணக்கம் தெரிவித்துள்ளது. தங்களிடம் பணியாற்றி வரும் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கு இந்த தற்காலிக வேலை பெர்மிட்டை பெற்று தருவது மூலம் அவர்களை முதலாளிமார்கள் தொடர்ந்து வேலைக்கு அமர்த்திக்கொள்ள முடியும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் பற்றாக்குறையினால் தங்களின் தொழிலும் செயலாக்கமும் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு முதலாளிமார்களுக்கு இத்தகைய வாய்ப்பை அரசாங்கம் வழங்கியிருப்பதாக உள்துறை அமைச்சருமான ஜாஹிட் தெரிவித்தார். எனினும் அரசாங்கத்திடமிருந்து தற்காலிக வேலை பெர்மிட்டை பெற்று தொடர்ந்து வேலையில் அமர்த்தப்படும் அந்நியத் தொழிலாளர்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவர் என்று அவர் சொன்னார். சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான இந்த தற்காலிக வேலை பெர்மிட்டை குடிநுழைவுத்துறை வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்நியத் தொழிலாளர்களுக்கு வழக்கம் போல் செலுத்தப்படும் லெவி கட்டணத்தைப் போன்று இத்தகைய தொழிலாளர்களுக்கும் முதலாளிமார்கள் லெவி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். நடைமுறை சிக்கல்களை சட்டத்துறை அலுவலகம் தீர்த்தவுடனே சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான இந்த தற்காலிக வேலை பெர்மிட்டை வெளியிடப்படுவது துவங்கப்படும் என்று துணைப்பிரதமர் தெரிவித்தார். நேற்று அந்நியத் தொழிலாளர்கள் மற்றும் சட்டவிரோதத் தொழிலாளர்களுக்கான அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு தலைமையேற்றப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். தவிர தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள நான்கு துறைகளில் அந்நியத் தொழிலாளர்கள் எடுக்கப்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் துணைப்பிரதமர் தெரிவித்தார். பண்ணைத் தொழில் (Poultry Farming) , சுரங்க- கல்லுடைப்புத்துறை (Mining - Quarrying) , சரக்குகளை கையாளுதல் ( Cargo Handling) மற்றும் விருந்தோம்பல் - சுற்றுலாத்துறை ( Hospitality - Tourism) ஆகியவையே அந்த நான்கு துறைகளாகும். இந்த நான்கு துறைகளிலும் தொழிலாளர் பற்றாக்குறை கடுமையாக இருப்பதை நாங்கள் உணர்ந்து இருப்பதால் அத்துறைகளில் அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு அனுமதி அளித்துள்ளோம் என்றார் துணைப்பிரதமர். எனினும் பண்ணைத் தொழில் , சுரங்க- கல்லுடைப்புத்துறை , சரக்குகளை கையாளுதல் மற்றும் விருந்தோம்பல் - சுற்றுலாத்துறை ஆகிய நான்கு துறைகளில் அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு வரும் 2020 ஆம் ஆண்டு வரையில் மட்டுமே அனுமதி என்று அவர் சொன்னார். * லெவி கட்டணத்தை முதலாளிமார்களே ஏற்க வேண்டும் * 4 துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களை எடுக்க அனுமதி * தொழிலாளர் பற்றாக்குறையினால் தொழில்கள் முடங்கக்கூடாது * தற்காலிக வேலை பெர்மிட்டை பெறும் தொழிலாளர்கள் கண்காணிக்கப்படுவர்

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img