மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா கொலை விவகாரத்தில் ஏற்பட்டுள்ள புதிய அதிரடித் திருப்பத்தால் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளையும் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஒன்றுகூடி இந்த படுகொலை தொடர்பான மறு விசாரணை குறித்து விவாதிக்க வேண்டுமென ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
அல்தான்துயாவை சுட்டுப்படுகொலை செய்யுமாறு ஆணையிட்டவரே முன்னாள் பிரதமர் நஜீப்தான் என்று கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான அஸிலா ஹட்ரி கூறியதை அடுத்து இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பு அடைந்துள்ளது.
தமக்கு எதிரான மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.
அதேபோன்று இது ஓர் அபாண்டம் என்றுகூறி வரும் நஜீப்பும் இதுபற்றி மறுவிசாரணை செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.
எனவே நஜீப்பின் வழக்கறிஞர்கள், அல்தான்துயா குடும்ப வழக்கறிஞர்கள், உளவு பேதா பி.பாலா குடும்ப வழக்கறிஞர்கள், ஒரு வர்த்தகரான ஜெ. தீபக் வழக்கறிஞர், சட்டத்துறை அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி அனைவரும் உட்கார்ந்து மறுவிசாரணை குறித்து விவாதிக்க வேண்டும் என்று லிம் கிட் சியாங் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்