தோட்டப் புறங்களில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் எதிர்வரும் ஆண்டில், முதலாம் ஆண்டிற்கான மாணவர்களின் பதிவு மிகவும் சரிவு கண்டுள்ளதால், எதிர் காலத்தில் தமிழ்ப் பள்ளிகள் மூடுவிழா காணும் அபாயம் இருப்பதாகக் கருத முடிகிறது.
பேராவிலுள்ள பத்தாங் பாடாங் மாவட்டத்தில் 19 தமிழ்ப் பள்ளிகள் இருந்த போதிலும், தோட்டப் புறம் மற்றும் சிறிய பட்டணங்களில் உள்ள 10 பள்ளிகளில் அடுத்த ஆண்டிற்கான முதலாம் ஆண்டு பதிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. சிலிம் ரிவருக்கு அருகேயுள்ள ஒரு தோட்டப் புறப் பள்ளியில் இன்று வரை ஒரு மாணவர்கூட பதிவு செய்யப் படவில்லை என தெரிய வந்துள்ளது. வட்டாரத்திலுள்ள இதர 8 சிறிய பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதலாம் ஆண்டிற்கு ஒரு மாணவரும் அதிக பட்சம் இரு மாணவர்களே பதிவு செய்துள்ளனர் என்பது அதிர்ச்சித் தகவலாகும்.
இந்நிலை தொடர்ந்து இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் நீடித்தால், தமிழ்ப் பள்ளிகளை மூடவேண்டும் என ஒருசில தரப்பினர் கோரிக்கை விடுத்து வருவதை மெய்ப்பித்து காட்டி விடும். மாணவர்கள் இல்லாவிட்டால் பள்ளிகள் இயல்பாகவே மூடப்படும் என்பதனை இந்திய சமுதாயம் உணரவேண்டும். தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு, தமிழ்ப் பள்ளிக்கே பிள்ளைகளை அனுப்புவோம் என கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக மிக வேகமாகச் செயல்பட்டு வந்த அமைப்புகள் தற்போது சற்று சோர்ந்து போய் விட்டதாக உணரமுடிகிறது
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்