பிரிட்டீஷ் அரசாங்கத்திடம் வழக்கு போட்டு ஒவ்வொரு மலேசிய இந்தியருக்கும் 10 லட்சம் அமெரிக்க டாலர் இழப்பீடு வாங்கித் தருவேன் என்று அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்று அமைச்சர் வேதமூர்த்தியிடம் செனட்டர் டத்தோ டி.மோகன் மேலவையில் காட்டமாக கேள்வி எழுப்பினார். இதனால் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது. நீர் தான் பொய்யர் என்று இருவருமே மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டனர்.
மேலவையில் விவாத நேரத்தின் போது செனட்டர் டத்தோ டி.மோகன் கடந்த 2007 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரிடமிருந்து மலேசிய இந்தியர்களுக்கு இழப்பீடு வாங்கித் தருவேன் என்று சொல்லி அங்கு போய் 5 ஆண்டுகள் தங்கியிருந்தீர்களே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் வேதமூர்த்தி நீங்கள் விவரம் தெரியாமல் பேச வேண்டாம். தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள் என்று பதில் அளித்தார்.
இந்த நேரத்தில் இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது. பாரிசான் அரசாங்கத்தில் 10 ஆயிரம் கோவில்கள் என்று பொய் சொன்னவர்தானே நீங்கள் என்று கூறிய போது விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாத எதையும் பேசாதீர்கள். இந்த குற்றச்சாட்டுகளை வெளியே வந்து சொல்லுங்கள் உங்கள் மீது நான் வழக்கு போடுவேன் என்று பதில் அளித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்