மித்ரா எனப்படும் மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவின் நிதிகள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட விவகாரத்தில் எழுப்பப்படும் கேள்விகள், சந்தேகங்களுக்கு பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டுமென பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்திய சமுதாய இயக்கங்களுக்காக அவர் வழங்கியதாகக் கூறும் 99,375,199.20 வெள்ளி விவகாரம் அடுத்த சில நாட்கள், வாரங்கள், அல்லது மாதங்களில் கடுமையான கேள்விக்கணைகளுக்கு வித்திடும்.
இந்திய சமுதாயத்தில் இது தொடர்பாக கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது, சில மாதங்களுக்கு முன்னர் மித்ரா வழங்கியதாகக் கூறப்பட்ட 35 மில்லியன் வெள்ளி விவகாரத்தில் ஒரு வெளிப்படையான விளக்கம் வழங்கப்படவில்லை. மேலும் தகுதியானவர்களுக்கு அது வழங்கப்பட்டதா? ஏழைகளுக்கு அது போய்ச் சேர்ந்ததா என்ற கேள்வி எழுந்தது.
மணப்பெண் அலங்காரம், ரசிகர் மன்றம், கார் கம்பெனிகள், பாலர் பள்ளிகளுக்கு தரவா இந்த நிதி வழங்கப்பட்டது?
ஏழை இந்திய சமுதாயத்தை கைதூக்கி விட கொண்டுவரப்பட்ட நிதி இந்தியர் அல்லாத அமைப்புகளுக்கு தரப்பட்டது ஏன்?
கண் மருத்துவமனை, பொது பல்கலைக்கழக மையத்திற்கு மித்ரா நிதியை வழங்க வேண்டிய அவசியம் என்ன?
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்