தூக்குத் தண்டனைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் போலீஸ் படை சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் அஸிலா ஹட்ரி இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மிக முக்கியப் பிரமுகர் (வி.வி.ஐ.பி.) ஒருவரைச் சந்திப்பதற்காகக் காஜாங் சிறைச்சாலைக்கு வெளியே கொண்டுவரப்பட்டதாக வழக்கறிஞர் முகமட் ஷாஃபி அப்துல்லா நேற்று குற்றம்சாட்டினார். அரசியலில் டத்தோஸ்ரீ நஜீப்பை முடித்துக் கட்டுவதற்கு கூட்டுச் சதி நிகழ்ந்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாக நேற்று கூட்டரசு நீதிமன்றத்திற்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போலீஸ் படை சிறப்பு நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் சிருல் அஸ்ஹார் ஒமாரைச் சந்திக்க மலேசிய அரசாங்கத்தின் ஏஜெண்ட் உட்பட சிலர் ஆஸ்திரேலியாவிற்குச் சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார். குடிநுழைவுத் துறையால் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை இங்கு கொண்டு வந்து நஜீப்பிற்கு எதிராக அறிக்கை விடும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதம் சிலர் அஸிலாவைச் சந்தித்தது எனக்குத் தெரியும். அதனை என்னால் உறுதிப்படுத்த முடியாது என்றாலும் நம்பத்தகுந்த இடத்திலிருந்து எனக்கு தகவல் கிடைத்தது. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மிக முக்கியப் பிரமுகர் ஒருவர் காஜாங் சிறைச்சாலைக்கு வெளியே அஸிலாவைச் சந்தித்து பேசியுள்ளார் என்றார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்