தமது தந்தை துன் சாமிவேலு சரியான மனநிலையில் இருக்கிறாரா என்பதை மருத்துவ ரிதீயில் சோதிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என அவரின் புதல்வர் வேள்பாரி தாக்கல் செய்த மனு நேற்று ஒத்திவைக்கப்பட்டது.
சாமிவேலு தமது கணவர் என்று ஈப்போவை சேர்ந்த இ.மிரியம் ரோசாலின் (மரியம் ரோசாலின்) என்பவர் இந்த வழக்கில் தலையிட தமக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளதால் இதனை ஒத்திவைப்பதாக நீதிபதி டத்தோ அமாட் பாச்சே கூறினார். கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி சம்பந்தப்பட்ட மாது செய்துள்ள இந்த மனுவை கருதி வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார் என்று மிரியம் வழக்கறிஞர் ஆர்.எஸ்.ராயர் கூறினார்.
இந்த வழக்கில் தலையிடுவதற்கு எனது கட்சிக்காரருக்கு உரிமை உண்டு என்பது எங்களது வாதம். ஏற்கெனவே ஈப்போ உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் துன் சாமிவேலுவையும் அவரின் புதல்வர் வேள்பாரியையும் நாங்கள் பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருக்கிறோம்.,
எந்த ஒரு நீதிமன்றமும் ஓர் உத்தரவை பிறப்பித்தால் அது எனது கட்சிக்காரர் மிரியம் ரோசாலினை பாதிக்கும். அதனால்தான் இன்று இந்த மனுவை தாக்கல் செய்தோம் என நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார். முன்னாள் அமைச்சரும் மஇகாவின் முன்னாள் தலைவருமான துன் சாமிவேலுவும் தாமும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாக ரோசாலின் கூறிவருகிறார்.
இதற்கான ஆதாரங்களை வைத்திருப்பதாகவும் ஒரு பொது சட்ட மரபின் அடிப்படையில் தங்களுக்கிடையில் குழந்தை இல்லை என்றாலும் தாம் அவருக்கு மனைவியாக இருந்ததாக அவர் கூறி வருகிறார். அவர் செய்துள்ள மனுவை மீது வரும் ஜனவரி 7 ஆம் தேதி நீதிமன்றம் பரிசீலிக்கவிருக்கிறது.
தமது தந்தை மனநிலை சரியில்லாத நிலையில் இருப்பதால் தேர்ச்சி பெற்ற ஒரு மனோ தத்துவ மருத்துவர் அவரை சோதித்து அவர் நிலைபற்றி முடிவெடுக்க நீதிமன்றம் ஆணையிட வேண்டுமென சாமிவேலு வின் புதல்வர் வேள்பாரி அண்மையில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது தெரிந்ததே.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்