பேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் 2000 ஏக்கர் நிலத்தை வழங்கியிருந்தது. அந்த நிலம் ம.இ.காவுக்கு வழங்கப் பட்டது என ம.இ.கா பேரா மாநில தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ இளங்கோ கூறியிருப்பது அப்பட்டமான பொய் என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
சட்டமன்றக் கூட்டங்களில் 2000 ஏக்கர் நில விவகாரமாக கேள்விகள் எழுப்பப்படும் போது, அதற்கான பதிலைத் தருவதற்கு ம.இ.கா பிரதிநிதிகள் யாரும் இல்லாததால் நம்பிக்கைக் கூட்டணி இந்திய பிரதிநிதிகள்தான் பதில் கூறவேண்டியுள்ளது. 2000 ஏக்கர் நிலம் மேம்பாடு செய்யப்பட்டும் இன்று வரை இந்திய மாணவர்கள் மேம்பாட்டிற்கு அந்த அறவாரியம் என்ன செய்துள்ளது என வினவினார். தமிழ்ப்பள்ளி மாணவருக்கு இதுவரை ஒரு சல்லிக்காசு கூட வழங்கப் படவில்லை என்பதை அந்த அறவாரியம் மறுத்துக் கூறமுடியுமா? என்றார்.
பேரா மாநில ஆட்சி மாற்றம் அடைந்தபோது, 2000 ஏக்கர் நில மேம்பாட்டு அறவாரியத்தில் இடம் பெற்றிருந்த இளங்கோ, முன்னாள் மந்திரி புசாரின் ஆலோசகர் என்ற முறையில் தான் அந்த அறவாரியத்தில் இடம் பெற்றிருந்ததாகவும் தற்போது அக்குழுவில் இருப்பது நியாயம் இல்லை என தன்னிடமே கூறியதாக அ.சிவநேசன் கூறினார். தற்போது நம்பிக்கைக் கூட்டணி வேறு 2000 ஏக்கர் நிலத்தை பெற்றுக் கொள்ளுங்கள், எங்களைச் சீண்டாதீர்கள் என அறிக்கை விடுவது வேடிக்கையாக இருப்பதாகக் கூறினார்.
மாநில தமிழ்ப்பள்ளி மற்றும் இந்திய மாணவர் கல்வி மேம்பாட்டுக்காக 2000 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதே தவிர ம.இ.கா வுக்கு இந்நிலம் வழங்கப் படவில்லை என்றார். ஐந்து ஆண்டுகளாகியும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்காமல், இனியும் இது ம.இ.கா வின் சொத்து என மார்தட்டிக் கொண்டிராமல், இந்திய மாணவர் கல்வி மேம்பாட்டிற்குத் தேவையான உதவிநிதிகளை வழங்க முன்வரவேண்டும் என அ.சிவநேசன் வலியுறுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்