பிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள் தங்கப்பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். 30ஆவது சீ விளையாட்டுப் போட்டி பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இவ்விளையாட்டுப் போட்டியில் 11 நாடுகளில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
நவம்பர் 30ஆம் தேதி தொடங்கிய இந்த சீ விளையாட்டுப் போட்டி நேற்றுடன் நிறைவுக்கு வந்தது. இப்போட்டியின் நிறைவு விழா நேற்று மணிலாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் 70 தங்கப்பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் மலேசிய அணியினர் பிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் களமிறங்கினர்.
போட்டியில் இறுதி நாள் போராடிய மலேசிய அணியினர் 55 தங்கப்பதக்கங்களை வென்றனர். மேலும் 58 வெள்ளி, 71 வெண்கலம் என மொத்தம் 184 பதக்கங்களை மலேசிய அணியினர் வென்றுள்ளனர். சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து களமிறங்கிய இந்திய விளையாட்டாளர்களில் ஐந்து பேர் தங்கப்பதக்கம் வென்றனர். இதில் மகளிருக்கான பூப்பந்துப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய கிஷோனா செல்வதுரை நாட்டிற்கு தங்கப்பதக்கத்தை வென்று தந்தார்.
நாட்டின் பூப்பந்து விளையாட்டுத்துறையில் கிஷோனா நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருகிறார். இளம் வயதிலேயே பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள கிஷோனா தற்போது சீ விளையாட்டுப் போட்டியிலும் நாட்டிற்குத் தங்கப்பதக்கத்தை வென்று தந்துள்ளார்.
கராத்தே விளையாட்டுப் போட்டியில் களமிறங்கிய இந்திய விளையாட்டாளர்களில் மூன்று பேர் தங்கப்பதக்கம் வென்றனர். மேலும் ஒருவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 55 கிலோ கிராம் குமித்தே பிரிவில் களமிறங்கிய பிரேம்குமார் செல்வம், ஆண்களுக்கான 75 கிலோ கிராம் குமித்தே பிரிவில் களமிறங்கிய ஷர்மேந்திரன் ரகுநாதன், பெண்களுக்கான 55 கிலோ கிராம் குமித்தே பிரிவில் களமிறங்கிய மாதுரி பூவாசன் ஆகியோர் நாட்டிற்குத் தங்கப்பதக்கத்தை வென்று தந்தார். அதே வேளையில் பெண்களுக்கான 61 கிலோ கிராம் குமித்தே பிரிவில் களமிறங்கிய மதிவாணி முருகேசன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆக மொத்தத்தில் சீ விளையாட்டுப் போட்டியில் கராத்தே பிரிவில் மலேசிய அணியினர் 4 தங்கம், 4 வெள்ளிப்பதக்கங்களை வென்றனர். பெண்களுக்கான கூடைப்பந்துப் போட்டியில் களமிறங்கிய மலேசிய அணியினர் தங்கப்பதக்கத்தை வென்றனர். மலேசிய அணியின் இவ்வெற்றிக்கு கரிஷ்மா லோகநாதனின் பங்கு அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு சீ விளையாட்டுப் போட்டியிலும் திடல்தடப் போட்டிகள் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அவ்வகையில் இம்முறை திடல் தடப் போட்டியில் மலேசிய அணியினர் 5 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலப்பதக்கங்களை வென்றனர். இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் களமிறங்கிய நவ்ராஜ் சிங் நாட்டிற்கு வெள்ளிப்பதக்கத்தை வென்று தந்தார். இப்பிரிவில் களமிறங்கிய மலேசியாவின் மற்றொரு வீரரான லீ ஹுப் வெய் தங்கப்பதக்கத்தை வென்றார். ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் களமிறங்கிய ரோய்சன் வின்சண்ட் நாட்டிற்கு வெண்கலப்பதக்கத்தை வென்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸ் சாம்பியன்...
30ஆவது சீ விளையாட்டுப் போட்டியில் உபசரணை நாடான பிலிப்பைன்ஸ் ஒட்டுமொத்த வெற்றியாளர் பட்டத்தைத் தட்டிச் சென்றது. பிலிப்பைன்ஸ் அணியினர் 149 தங்கம், 117 வெள்ளி, 120 வெண்கலம் என 386 பதக்கங்களை வென்றுள்ளனர்.
98 தங்கம், 85 வெள்ளி, 104 வெண்கலம் என மொத்தம் 287 பதக்கங்களை வென்ற வியட்நாம் அணியினர் பதக்கப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர்.
92 தங்கம், 103 வெள்ளி, 123 வெண்கலம் என மொத்தம் 318 பதக்கங்களை வென்ற தாய்லாந்து அணியினர் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
இந்தோனேசிய அணியினர் 72 தங்கம், 84 வெள்ளி, 111 வெண்கலம் என 267 பதக்கங்களை வென்று பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தனர்.
மலேசிய அணியினர் 55 தங்கம், 58 வெள்ளி, 72 வெண்கலம் என 267 பதக்கங்களை வென்று பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தனர்.
சிங்கப்பூர், மியன்மார், கம்போடியா, புரூணை, லாவோஸ், திமோர் லெஸ்தே ஆகிய அணிகள் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்