சீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் தங்கத்தை வென்ற கிசோனா செல்வதுரைக்கு பாராட்டு குவிகிறது.
பூப்பந்து களத்தில் புயல் வேகத்தில் எழுந்த கிசோனா வெற்றி பெற்ற கையோடு தனது பயிற்சியாளர் தே சியூ போக்கை கட்டிப்பிடித்து அழுதார். யாரும் எதிர்பாராத வெற்றி இது. இத்தனைக்கும் போட்டிக்கு முன்பாக இதில் வெற்றி பெற முடியுமா? பதக்கம் கிடைக்குமா? என்று யாரும் நம்பவில்லை. தற்போது உலகத் தர வரிசையில் 104 ஆவது வீராங்கனையாக இருக்கும் கிசோனா இன்னொரு வீராங்கனை உடல்நலக் குறைவால் போட்டியிலிருந்து விலகியதால் அவருக்கு மாற்றாக களத்தில் இறக்கப்பட்டார்.
நெகிரி செம்பிலானை சேர்ந்த கிசோனா அந்த இறுதி ஆட்டத்தில் இந்தோனேசிய வீராங்கனை ருசேலி ஹர்த்தவானுக்கு எதிராக ஆடிய அந்த அபார ஆட்டம் எல்லோரையும் வியக்க வைத்தது. 20-22 என்றுமுதல் செட்டில் பின்னடைவை சந்தித்த அவர் அடுத்த இரு செட்டில் புயல் போல எழுந்தார். 20-14, 20-13 என்ற ரப்பர் செட்டில் அவர் வெற்றி பெற்ற போது அரங்கில் அவருக்கு பெரும் கைதட்டல் எழுந்தது. வெற்றி பெற்ற பிறகு 5 நிமிடங்கள் அவரால் பேசக்கூட முடியவில்லை. இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம்.
இப்படி ஒரு மகிழ்ச்சியை இதுவரை நான் அடைந்ததே இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார். எனக்கு எந்தவொரு இலக்கையும் என் பயிற்சியாளர்கள் வழங்கவில்லை என்றாலும் களத்தில் இறங்கியவுடன் வெற்றி பெற வேண்டும் என்று உறுதியுடன் போராடினேன்.
சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்கமாக இருந்தது. ஓர் ஆட்டம் என்றால் எதுவும் நடக்கும். ஆனால் தொடக்கம் முதல் கடைசி வரை என்னுடைய உறுதியை கைவிடவில்லை என்று மகிழ்ச்சியுடன் கூறினார் பூப்பந்து வானில் புதிதாக உதித்துள்ள நம்பிக்கை நட்சத்திரம் கிசோனா.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்