தலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சிமிந்தி ஆலை ஒன்று முறைப்படி செயல்படவில்லை என்றும் சுகாதாரத்திற்கு பாதகமாக செயல்படுவதாகவும் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் புகார் தெரிவித்தார்.
இந்த சிமிந்தி ஆலை சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பாதுகாப்பற்ற முறையில் இந்த சிமிந்தி ஆலைக்குள் லோரிகள் புகுந்து வெளியேறுவதால் அது மற்ற வாகனங்களுக்கு ஆபத்தாக உள்ளது.
இந்த சிமிந்தி ஆலையின் லோரிகள் இரவு 7 மணிக்குப் பிறகு இப்பகுதியிலிருந்து வெளியேறவும் உள்ளே செல்லவும் கூடாது என்பது கோலாலம்பூர் நகராண்மைக்கழகத்தின் உத்தரவாகும். ஆனால் அதையும் மீறி இரவு 10 மணி வரை லோரிகள் சிமிந்தி ஆலையிலிருந்து வெளியேறுவதாக புகார் கிடைத்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்களும் தங்களிடம் உள்ளதாகவும் அவர் சொன்னார்.
இந்த சிமிந்தி ஆலை சுகாதாரமற்றது என்றும் பாதுகாப்பற்றது என்றும் கூறி அண்மையில் இந்த ஆலையை கோலாலம்பூர் நகராண்மைக்கழகம் இரண்டு வாரத்திற்குத் தற்காலிகமாக மூடியது. அனைத்துக் குறைகளும் இரு வாரத்திற்குள் சீர்ப்படுத்தப்பட வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது. ஆனால் ஆலையின் நிர்வாகம் விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி இதுவரையில் செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த சிமிந்தி ஆலையின் சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் அருகிலுள்ள ஆற்றில் கலக்கிறது. சிமிந்தி ஆலையின் உள்ளே உள்ள கால்வாய்களில் நீருடன் சிமிந்தியும் கலந்திருப்பதாக நேற்று காலை இந்த சிமிந்தி ஆலைக்குள் சென்று பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்தார்.
மேலும் இந்த சிமிந்தி ஆலை கட்டப்படுவதற்கு முன்பு இந்த இடத்திலிருந்த ரயில்வே கம்பம் இடிக்கப்பட்ட பின்னர்தான் இந்த ஆலை இங்கு அமைக்கப்பட்டது. இந்த ஆலைக்கு அருகில் இங்குள்ள மக்களுக்கான பிபிஆர் வீடமைப்புத் திட்டத்தை சிமிந்தி ஆலையின் நிறுவனம் கட்டபோவதாக கூறி இங்குள்ள மக்கள் கடந்த 1994ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்த பிபிஆர் கட்டுமானத்திற்கான தொடக்க விழா நடைபெற்று ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் கட்டுமானத்திற்கான அடித்தளம் மட்டுமே இதுவரையில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடம் இன்னும் கட்டப்படவில்லை. அந்த இடத்தை பார்வையிட்ட பின்னர் கோலாலம்பூர் நகராண்மைக்கழகத்தினரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மேம்பாட்டு நிறுவனத்தின் பிரதிநிதியுடன் பேச்சு வார்த்தை நடத்தியபோது கட்டடத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டதில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.
இந்த பதில் ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் இல்லை என்றும் அதற்கான காரணத்தை 30 நாட்களுக்குள் கோலாலம்பூர் நகராண்மைக்கழகத்திற்கு தெரியபடுத்த மேம்பாட்டு நிறுவனத்திற்கு கெடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வீடமைப்புத் திட்டம் 2022ஆம் ஆண்டு முடிவடைந்துவிடும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கட்டடத்தின் அடித்தளமே இன்னும் முறையாக அமைக்கப்படவில்லை என கூறுவது எந்தவகையிலும் நியாயமில்லை. கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப இந்த வீடமைப்பு திட்டம் கட்டித் தரப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்