கடந்த 2013ஆம் ஆண்டு போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருந்தபோது தன் கணவர் என். தர்மேந்திரன் மரணமுற்ற சம்பவத்தை எதிர்த்து அவரின் மனைவி மேரி மரிய சூசை தொடுத்திருந்த வழக்கில் அவருக்கு 4 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தன் கணவர் தாக்கப்பட்டது, போலீசாரின் அலட்சியம், அவரை தவறான முறையில் தடுத்து வைத்தது உட்பட கூட்டுச்சதி குறித்து தர்மேந்திரனின் மனைவி கடந்த 2016ஆம் ஆண்டு அரசாங்கம் மற்றும் போலீசாருக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தார்.
கொலை மற்றும் துப்பாக்கி வைத்திருந்தது காரணமாக தர்மேந்திரன் 10 நாட்களாகப் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். தர்மேந்திரன் மரணமுற்ற சம்பவம் தொடர்பான வழக்கில் 4 போலீஸ்காரர்கள் விடுதலை செய்யப்பட்டதை கடந்த ஆண்டு கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியிருந்தது.
தன் கணவரைப் போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டதை மேரி நிரூபித்துள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி அகமட் ஜய்டி இப்ராஹிம் தமது தீர்ப்பில் கூறினார். இந்த தாக்குதலே தர்மேந்திரனின் மரணத்திற்கு வழிவகுத்தது என்பதையும் இவ்வழக்கை மூடிமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டிருந்ததையும் மேரி நிரூபித்ததாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, தர்மேந்திரனின் மனைவிக்கு நீதி கிடைத்ததில் தாம் மகிழ்ச்சி அடைவதாக மேரி சார்பில் வாதாடிய வழக்கறிஞர் என். சுரேந்திரன் தெரிவித்தார். இது ஒருபோதும் அவருக்கு பெரும் ஆறுதலாக இருக்க முடியாது என்ற அவர், குறைந்தப்பட்சம் தர்மேந்திரனின் குடும்பத்தினருக்கு நீதி கிடைத்துள்ளது. அதோடு தர்மேந்திரன் கொலை குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்நால்வரும் விடுவிக்கப்பட்டதை நீதியின் தோல்வி என்று அவர் விவரித்தார். இன்று நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு மோசமான தீர்ப்பு என்றும் சுரேந்திரன் கூறினார். உள்துறை அமைச்சரும் காவல்துறையும் இந்த தீர்ப்பை மதிப்பீடு செய்ய வேண்டும். அதோடு போலீஸ் அதிகாரிகளை தப்பிக்க அனுமதிக்கும் சட்டத்தில் ஏதோ தவறு இருப்பது பற்றி அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்தும் விளக்கம் தர வேண்டும் என்று சுரேந்திரன் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பு போலீஸ் படை எவ்வாறு இயக்கப்படுகிறது என்பது உட்பட அவர்களின் பொறுப்புடைமை குறித்தும் மிகுந்த கவலைகளை எழுப்பியுள்ளது என்றும் அவர் கூறினார். இவ்விவகாரத்தை உள்துறை அமைச்சர் கவனத்தில் கொண்டு உடனடியாக தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார். 2016 ஆம் ஆண்டில் இச்சம்பவத்தை விசாரணை செய்த அமலாக்க உயர்நெறி ஒருமைப்பாடு ஆணையம் (இ.ஏ.ஐ.சி) தர்மேந்திரன் இறப்பதற்கு முன்பு காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டுள் ளார் என்றும் கூறியிருந்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்