img
img

செரண்டா தமிழ்ப்பள்ளி எப்போது தான் எழும் இனியும் சாக்கு போக்கு வேண்டாம்
வியாழன் 12 டிசம்பர் 2019 16:21:11

img

இரண்டு முறை அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டும் இன்றுவரை இதோ அதோ என்று  சாக்கு போக்குகளை சொல்லிக்கொண்டு காலத்தை கடத்த வேண்டாம் என்று  செரண்டா தமிழ்ப்பள்ளியை  காப்போம்"  என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜீவா கேட்டுக் கொண்டார். 

உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுன்  லியாவ் செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம் தொடர்பாக உறுதியான சரியான  தகவலை பொது மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

இதுவரை வழங்கப்படுகின்ற செய்திகள் வெறும் கண்துடைப்பாக இருந்து கொண்டிருக்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டும் 2015 ஆம் ஆண்டும்  இரண்டு முறை  இந்த பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. ஆனால்  அப்பள்ளி எழுவதற்கான  எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை. பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. இது ஏன்  என்று பொது மக்களுக்கு தெரிய வேண்டும். 

கடந்த காலங்களில் தேசிய முன்னணி அரசாங்கம் கூறிய  அதே காரணங்களையும் சாக்கு போக்குகளையும் நம்பிக்கைக் கூட்டணியும் வழங்கினால்  ஒரு ஆட்சி மாற்றத்திற்கு  என்னதான்  பதில்? என்ன  தான் பயன்? 

யூ.எம்.டபிள்யூ நிறுவனம் செரண்டாவில் தமிழ்ப் பள்ளியைக் கட்டுவதற்கு இரண்டு ஏக்கர் நிலத்திற்கான நிலப் பட்டாவை லாடாங் மிஞ்ஞாக் தமிழ்ப் பள்ளியின் வாரியக் குழுவிடம் வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த நிலப் பட்டாவைப் பெறுவதற்கு ஏன் கடந்த  அரசாங்கம் செய்ததையே இவர்களும் செய்தால் ஆட்சி மாற்றம் வந்ததில் என்னதான் பயன்? 

அடிக்கல்  நாட்டு விழா எல்லாம் வெறும் கண்துடைப்பா? 

இவ்வளவு காலதாமதம் ஆகின்றது என்பது ஆச்சரியமாக இருப்பதாகக் கூறினார். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுன் லியாவ் நிலப் பட்டாவைப் பெறுவதற்கான முயற்சிகளை வழக்கறிஞர் மூலம் மேற்கொண்டு வருவதாகவும் அந்த முயற்சிக்கு மாவட்ட அதிகாரியும் ஒத்துழைக்க முன் வந்துள்ளதாக தமிழ் நாளிதழ்கள் வழி அறிக்கை விடுத்திருந்தார்.

நாளிதழ்கள் வழி அறிக்கை விடுப்பதைத் தவிர்த்து ஜூன் லியாவ் இவ்வட்டார இந்திய சமூகத்தினரை அழைத்து தெளிவான விளக்கத்தை நேரிடையாகத் தரவேண்டும் என ஜீவா குழுவினர் கோரிக்கை விடுத்தனர். செரண்டா தமிழ்ப் பள்ளி உருவாக்கம் பெறுவதற்கு முன்னுரிமை அளித்து செய்திகளை வெளியிட்டு வரும் நண்பன் நாளிதழுக்கும் அக்குழுவினர் நன்றியினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பிடிபிடிஎன் - சொக்சோவின் இணைய வேலை வாய்ப்பு சந்தை

4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு! இணைய வேலை வாய்ப்பு சந்தையின்

மேலும்
img
லாபம் சம்பாதிக்க இது நேரமில்லை!

நாட்டை கோவிட் - 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில

மேலும்
img
கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்

கேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி

மேலும்
img
சிகரெட் விற்பனையில் ஈடுபடும் உணவு விநியோகஸ்தரர்கள்

உணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு

மேலும்
img
மதுபானம் அருந்திய 9 பேர் கைது

நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள்ள ஆற்றோரத்தில் மது அருந்திக்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img