வெள்ளி 13, டிசம்பர் 2024  
img
img

அந்நிய நாட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதில் அதிகார துஷ்பிரயோகம்,ஊழல், சுரண்டல்! எஸ்.பி.ஆர்.எம். அம்பலம்
வெள்ளி 08 நவம்பர் 2019 14:40:31

img

கோலாலம்பூர், நவ.8-

நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச்  சேர்ப்பதில் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உட்பட சுரண்டல் நடவடிக்கைகளும் அதிகமாக நிகழ்ந்துள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் லத்திஃபா கோயா கூறினார்.

இந்நாட்டிற்கு வேலை செய்ய வரும் அந்நிய நாட்டுத் தொழிலாளர் களிடமிருந்து தனிப்பட்ட நபர்களும் ஏஜெண்டுகளும் இந்த  சுரண்டல் வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் ஊழல் அதிகமாக நிகழ்ந்துள்ளது. இங்கு வேலை உண்டு என நம்பி அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர். ஆனால், இங்கு அவர்களுக்கு அதிகமான வேலைகள் இல்லை.

எந்தவித பயண ஆவணங்கள் இன்றி அவர்கள் நாட்டிற்கு வந்து விடுகின்றனர். சிலரின் துரோகச் செயலால் அவர்கள் சட்டவிரோதமாக விசாவுக்கு மனு செய்கின்றனர் என்றார்.

நேற்று தலைநகரில் 2019ஆம் ஆண்டுக்கான மலேசியாவின் நிலையான மேம்பாட்டு அடைவு நிலை திட்டத்தின் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றியப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

பயண ஆவணங்கள் இல்லாத காரணத்தாலே இந்நாட்டில் அதிகமான அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் பிடிபடுகின்றனர். 

நாட்டிற்கு வரும் அதிகமான அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் முறையான வழிகளில் வராமல் ஏஜெண்டுகள் மூலம் குறுக்கு வழியில் நாட்டிற்குள் நுழைகின்றனர் என்றார்.

இப்போது நாட்டிற்குள் நுழையும் அந்நிய நாட்டவர்களை குடிநுழைவுத் துறை கையாண்டு வருகிறது. அது மனிதவள அமைச்சிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பரிந்துரை செய்வதாகவும் அவர் சொன்னார்.

அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைவதில் புதிய மாற்றம் செய்யப்பட வேண்டும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விரும்புகிறது. காரணம் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்காக நாட்டில் எத்தனை வேலைகள் காலியாக உள்ளன என்பது மனிதவள அமைச்சுக்கே தெரியும் என்றார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img