கோலாலம்பூர், நவ.8-
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12 பேர் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து லண்டனிலுள்ள தமிழர்கள் தங்களின் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று லண்டனிலுள்ள மலேசிய தூதரகத்தின் முன்புறம் அவர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்து மலேசிய அரசாங்கத் திற்கு எதிராக தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அந்த 12 பேரையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என மலேசிய அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்கும் வண்ணம் அவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்திகளை ஏந்தி நின்றனர்.
அந்த 12 பேரையும் மலேசிய அரசாங்கம் கைது செய்தது அர்த்தமற்றது என்பதோடு அது சட்டத்திற்குப் புறம்பானது என்று பல்வேறு வாசகங்களைக் கொண்ட அட்டைகளையும் அவர்கள் ஏந்தி நின்றனர்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மலேசியாவுக்கு மிரட்டலானது என கூறிக் கொண்டிருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது என்பதோடு அது சட்டத்திற்குப் புறம்பானது என்று அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் செயலற்று போனதை இலங்கை அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில் மலேசிய அரசாங்கம் சந்தேகத்தின் பேரில் 12 பேரை கைது செய்துள்ளது வேடிக்கையாக உள்ளது என்று அந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரசாந்த் பாஸ்கரன் கூறினார்.
அவர்கள் கைது செய்யப்பட்டது மனித உரிமையை மீறியதற்கு சமமாகும் என்றார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்