கொழும்பு,
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களை அடுத்து அங்கு பதற்ற நிலை அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 41ஆவது கூட்டத்தொடரில் தொடக்க உரை நிகழ்த்திய போது அவர் இவ்வாறு கூறினார்.
மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கை அதிபருக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில், ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாமை, அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதில் பாதுகாப்புப் படைகளின் செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைக்கான ஆரம்ப எச்சரிக்கையாக இது கருதப்பட வேண்டும். சில தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகள் தேவை என்றாலும், அவசரகால நிலை குறைந்தபட்ச காலமாக இருக்க வேண்டும்.
அனைத்து வகையான வன்முறை மற்றும் பாகுபாடுகளின் மூல காரணங்களை கண்டறிந்து, நிவர்த்தி செய்வதற்கு அரசியல், மத மற்றும் பிற சமூகத் தலைவர்களை ஒன்றிணைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்