கோலாலம்பூர், ஜன. 12- மஇகா தேசியத் தலைவர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ பழனிவேலை கவிழ்ப்பதற்கு சங்கங்களின் பதிவு அலுவலகத்துடன் கூட்டுச்சதி செய்ததாக டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் மற்றும் இதர எழுவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், அந்த வழக்கை மறுபடியும் புதிய நீதிபதி ஒருவரை கொண்டு முழுமையாக மறு விசாரணை செய்யப்பட வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தடால் அடியாக தீர்ப்பு வழங்கியிருப்பது டாக்டர் சுப்பிரமணியத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்று சட்ட நிபுணர்கள் வாதிடுகின்றனர். இந்த முழு விசாரணையிலிருந்து டாக்டர் சுப்பிரமணியமோ அல்லது இதர எழுவரோ ஒரு போதும் தப்பித்து ஓட முடியாது. காரணம், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு மிகத் தெளிவாக உள்ளது என்று சட்ட நிபுணரும் முன்னாள் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவருமான ரகுநாத் கேசவன் தெரிவித்தார். பழனிவேலை தலைவர் பதவியிலிருந்து கவிழ்ப்பதற்குகூட்டுச் சதி நடந்து இருப்பதாக போதுமான ஆதாரங்களை பழனிவேலின் ஆதரவாளர்கள் முன்வைத்த போதும், அதனை விசாரணை செய்யாமல், சாட்சிகளை அழைக்காமல் வழக்கை தள்ளுபடி செய்து இருப்பதன் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதி மிகப்பெரிய தவற்றை செய்து இருப்பதாக மூவர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ தெங்கு மைமுன் பின்தி துவான் மாட் நேற்று முன்தினம் தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இது உண்மையிலேயே பழனிவேலின் ஆதரவாளர்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றியாகும். பழனிவேலிடமிருந்து தலைவர் பதவியை பறித்ததை கண்டித்து தங்களுக்கு நீதிவேண்டும் என்று கடந்த ஓராண்டு காலமாக சட்டப் போரட்டத்தை நடத்தி வந்த பழனி ஆதரவாளர்களுக்கு இது புத்துணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ இந்த வழக்கை மறுபடியும் விசாரணை செய்ய வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்து இருப்பதால் இந்த வழக்கில் பிரதிவாதிகளான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் மற்றும் இதர ஏழு பேர் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோர முடியாது’ என்றார் ரகுநாத் கேசவன். பொதுவாக ஒரு வழக்கை மறுபடியும் விசாரணை செய்ய வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் அந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து சாட்சிகளும் அழைக்கப்பட வேண்டும், ஆதாரப் பொருட்கள் அனைத்தும் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். இதுதான் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் சாரம்சமாகும் என்றார் ரகுநாத் கேசவன். * கூட்டரசு நீதிமன்றத்தில் சுப்பிரமணியம் வெற்றி பெறுவது என்பது எளிதானது அல்ல * பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்கலாம் * அரசாங்க ஏஜென்சியும் சம்பந்தப்பட்டுள்ளதால் தலைவலி மேலும் அதிகரிக்கலாம் * சாட்சிக்கூண்டு ஒன்றே கூட்டுச்சதி குற்றச்சாட்டுக்கு வெளிச்சம் தர முடியும்
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்