(கு. அன்பு அரசன்) பினாங்கு, ஜன.10- டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக அவதூறான செய்தி வெளியிட்டதற்காக முன்னணி ஆங்கில நாளிதழ் நேற்று இங்குள்ள உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டது. இதன் வழி அந்த வழக்கில் அன்வார் வெற்றி பெற்றுள்ளார். அந்த நாளிதழுக்கு எதிராக அன்வார் தொடுத்த அவதூறு வழக்கு நேற்று பினாங்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள்நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர். அன்வாருக்கு எதிராக தாங்கள் கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளிதழ் (என்.எஸ்.தி.) நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன் அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அந்த முன்னணி நாளிதழ் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனை தொடர்ந்து அன்வாருக்கு 60 ஆயிரம் வெள்ளி நஷ்ட ஈடாக வழங்கவும் அந்த நாளிதழ் ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2013 ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிரசுரிக்கப்பட்ட செய்தியில், நீதிபதிகளுக்கும் பிராசிகியூஷன் அதிகாரிகளுக்கும் லஞ்சமாக கொடுப்பதற்காக கர்ப்பால் சிங்கிடம் அன்வார் ஐந்து கோடி வெள்ளி வழங்கியதாக அந்த முன்னணி நாளிதழ் குறிப்பிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அன்வார் அந்த ஆங்கில நாளிதழுக்கும் மேலும் மூன்று தரப்புகளுக்கும் எதிராக நஷ்ட ஈடு கோரி அவதூறு வழக்கை தொடுத்தார். தான் தொடுத்திருக்கும் ஏழு கோடி வெள்ளி இந்த அவதூறு வழக்கு தொடர்பாக நேற்று திங்கட்கிழமை பினாங்கு உயர்நீதிமன்றத்திற்கு பலத்த சிறை வார்டர்களின் பாதுகாப்புடன் அன்வார் காலை 9.15 மணிக்கு வந்தார். நீதிமன்றத்தைச் சுற்றி அதிகாலையில் இருந்தே சாலைத் தடுப்புகள் போடப்பட்டிருந்தன. இழப்பீடு கோரி 2015 செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் ரஞ்சிட் சிங் டில்லோன், லூய் சுய் செர்ன், எட்ரியன் லாய் தி நியூஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பிரஸ் (எம்) பெர்ஹாட் ஆகியோரை பிரதிவாதிகளாக அன்வார் குறிப்பிட்டிருந்தார். அப்படியொரு அடிப்படையற்ற செய்தியை பிரசுரித்ததற்காக அன்வாரிடம் மட்டுமின்றி கர்ப்பால் சிங்கின் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அந்த நாளிதழ் தெரிவித்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்