நாட்டிற்குள்ளேயும் வெளியிலும் வெளிநாட்டினரின் வசதியான பயணத்திற்காக பயண ஆவணங்களில் தரவு களை மாற்றுவதன் வழி குடிநுழைவுத் துறையின் 37 அதிகாரிகள் இரண்டே ஆண்டுகளில் ஒரு கோடியே 80 லட்சம் வெள்ளியை சம்பாதித்துள்ளனர். தற்போது விசாரணையின் கீழ் உள்ள அந்த குடிநுழைவு அதிகாரிகள் தங்களின் ஒவ்வொரு வேலைக்கும் வெ.200 முதல் வெ.2,500 வரை கமிஷனாக பெற்று வந்தனர் என்று போலீஸ் வட்டாரம் அம்பலப்படுத்தியுள்ளது. நாட்டிற்குள் நுழைவதிலிருந்து கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ளவர்கள் தாராளமாக இந்நாட்டிற்குள் நுழைவதற்கு ஏதுவாக, குடிநுழைவு கணினி முறைகளில் இந்த அதிகாரிகள் தரவுகளை மாற்றியமைத்ததாக நம்பப்படுகிறது. இந்த 37 அதிகாரிகளும் கடந்த பிப்ரவரி, அக்டோபர் 12-ஆம் தேதிக்கிடையே கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் அணுக்கமாகத் தொடர்பை வைத்திருந்த மேலும் 37 சந்தேகப் பேர்வழிகளும் போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏஜெண்டுகளும், கும்பல் உறுப்பினர்களுமாவர். குறிப்பிட்ட அந்த ஈராண்டுகளில் வங்காளதேசம், இந்தியா, வியட்னாம், சீனா ஆகிய நாடுகளிலிருந்து 16,000 வெளிநாட்டினர் மலேசியாவிற்குள் நுழைந்துள்ளனர் என்று உத்துசான் நேற்று வெளியிட்டு செய்தி கூறுகிறது. கைது செய்யப்பட்டுள்ள அதிகாரிகளில், நால்வர் இன்னும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நால்வர் மனித கடத்தல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இதர அறுவர் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர், 11 பேர் அதே சட்டத்தின் கீழ் கட்டுப் பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு நடிகரின் மனைவி உள்ளிட்ட 12 சந்தேகப் பேர்வழிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்