அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், குத்தகை அடிப்படை யில் வேலை வாய்ப்பினை பெறவிருக்கும் 2,600 மருத்துவ பட்டதாரிகளின் எதிர்காலம் குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார் ஜ.செ.க நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக். நாட்டில் தற்போது மருத்துவர்களின் எண்ணிக்கை தேவைக்கும் மிகுதியாக இருப்பதை சுட்டிக் காட்டிய அவர், அரசாங்கத்தில் தங்களின் குத்தகை முடிவுக்கு வந்ததும் பாதிக்கப்பட்ட அந்த மருத்துவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் உண்மையில் வேலை வாய்ப்பை வழங்க முடியுமா என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியத்திடம் கேள்வியை முன் வைத்தார். குத்தகை முடிவுக்கு வந்ததும் அவர்களின் நிலைமை என்னவாகும்? தனியார் துறையில் அவர்கள் வேலை வாய்ப்பை பெற முடியுமா? - அப்புதிய மருத்துவ பட்டதாரிகளையும், அவர்களின் பெற்றோரையும் தொக்கி நிற்கும் கேள்விகள் இவைதான். ஆனால், இந்த சாதாரண, முக்கியமான அடிப்படை கேள்விக்கு சுப்ராவால் இதுவரை பதில் கொடுக்க முடியவில்லை என்று செப்பூத்தே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரேசா குறிப்பிட்டார். அவர்களின் குத்தகை காலவரை பூர்த்தியானதும் தனியார் துறையில் அவர்கள் வேலை வாய்ப்பை பெறலாம் என்று சுப்பிரமணியம் கூறியிருந்தார். ஆனால், அனுபவம் வாய்ந்த நிபுணத்துவ மருத்துவர்கள் மட்டுமே பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைப்படுவதால் அவர்களில் எத்தனை பேர் தனியார் துறைக்குள் நுழைய முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பிரதமர் நஜீப் கடந்த வெள்ளிக்கிழமை 2017 வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தபோது, ஹவ்ஸ்மென்ஷிப் பயிற்சியை மேற்கொள்ள இயலாத சுமார் 2,600 பட்டதாரிகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்கி குத்தகை அடிப்படையில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்தார். தேவைக்கும் மிகுதியான மருத்துவர்கள் இருப்பது பற்றி மலேசிய மருத்துவ சங்கமும், மலேசிய மருத்துவ மன்றமும், சுகாதார துறையின் முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ டாக்டர் சுவா சொய் லெக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி எழுப்பியிருக்கின்றனர். ஆனால், அரசியல் ரீதியில் இதற்கு தீர்வு காணும் பக்குவம் மத்திய அரசாங்கத்திற்கு இல்லை என்பதை திரேசா சுட்டிக்காட்டினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்