மாய வித்தை துறையின் முக்கியமான விருதாக கருதப்படும் மெர்லின் விருதை மலேசிய மண்ணின் மாய வித்தகன் விக்னேஸ்வரன் த/பெ அழகு பெற்று மலேசிய மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். மாய வித்தகர்களாக இருப்பவர்களுக்கு இந்த விருதை பெற வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும், இவ்வேளையில் தன் லட்சியத்தை நிறைவேற்றியதுடன் உலக அரங்கில் மக்களின் பாராட்டை பெற்றவராகவும் இவர் திகழ்கின்றார். இந்த விருதைப் பெற்ற நாட்டின் முதல் இந்தியர் என்ற பெருமையும் விக்கியையே சேரும். அண்மையில் பேங்காக்கில் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில் அனைத்துலக ரீதியில் 15 நாடுகளை சேர்ந்த மாய வித்தகர்கள் கலந்து கொண்டனர்.இதில் 37 ஆயிரம் உலக நாடுகளின் வாக்குகளை பெற்ற மாய வித்தகன் விக்கி இந்த மெர்லின் விருதை பெற்றுள்ளார். கலைஞர்களுக்கு எப்படி ஆஸ்கார் விருது பெருமையை சேர்க்கிறதோ அதேபோல் மாய வித்தகர்கள் மத்தியில் மெர்லின் விருது அங்கீகாரத்தை வழங்குகிறது. இவருடன் மேலும் ஐவருக்கு இந்த விருது விழாவில் விருதுகள் கிடைத்தன. இதில் ஒரே தமிழன் என்ற பெருமையையும் விக்கி கொண்டுள்ளார். கடந்த 10 வருடங்களாக இந்த மாய வித்தக துறையில் விக்கி பீடு நடைபோட்டு வருகிறார். சுமார் 8 நாடுகளில் இவர் மாய வித்தை நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.மலேசியாவில் பல மாய வித்தைகளை செய்து மக்கள் மனதில் இவர் இடம் பிடித்துள்ளார். ஆஸ்ட்ரோவில் மாய வித்தகன் எனும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் தன் விடா முயற்சியினால் இன்று உலக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த மாய வித்தை துறையில் மலேசிய இந்தியர்களின் ஈடுபாடு குறைவாகவே காணப்படுகிறது. ஆர்வமுள்ள இளைஞர்கள் இத்துறையில் இணைந்து பல வெற்றிகளை பெற வேண்டும் என மாய வித்தகன் விக்கி வலியுறுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்