img
img

சந்திரனிடம் சனி வந்தால்..
புதன் 29 ஏப்ரல் 2015 00:00:00

img
சந்திரன் இருக்கும் அதே இடத்தில் மற்ற கிரகங்கள் இருந்தால், பூமியில் இருப்பவர்களுக்கு அது எப்படி தெரியும்? இப்படி கற்பனை குதிரையை ஓடவிட்டார் ஓவியரான ரோன் மில்லர். மரணப் பள்ளத்தாக்கு பகுதியில், ஒரு சாலையிலிருந்து நிலாவை படம்பிடித்த புகைப்படத்தை, அந்த கற்பனையை செயல்படுத்த உபயோகித்தார் மில்லர். பூமியின் குறுக்களவில் கால்வாசி உள்ளது சந்திரன். அந்த இடத்தில் சனி கிரகத்தை அதன் வளையத்துடன் வைத்தால் எப்படி தெரியும்? சந்திரனை விட 35 மடங்கு பெரிய கிரகம் சனி. சந்திரன் பூமியிலிருந்து காட்சிக் களத்தில் அரை பாகை அளவை எடுத்துக்கொள்ளும். அந்த இடத்தில் சனியை வைத்தால் வானில் நம் பார்வைக்கு 18 பாகை அளவுக்கு அது அடைத்துக்கொள்ளும். சனியின் துணைக் கோளான டியோனைவிட பூமி சற்று தொலைவில் இருக்கும். சொல்லப்போனால் சனி கிட்டே வந்தால், பூமியே அதன் துணைக் கோள் போலத்தான் தெரியும். சனி கிரகத்தின் வளையம் பூமியிலிருப்பவர்களுக்கு கண்ணுக்கெட்டிய துாரம் வரை வானில் தெரியும். படத்திலிருப்பது வெறும் போட்டோஷாப் ட்ரிக் தான். ஆனால், அந்த கோணத்தில் பிரம்மாண்டமாக சிந்தித்தாரே ரோன் மில்லர். அங்கேதான் அவர் நிற்கிறார்.
பின்செல்

மாணவர் செய்திகள்

img
எஸ்.டி.பி.எம். தேர்வு:  தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.

அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img