நாடு முழுவதும் பள்ளிக் கூடங்களின் மேம்பாடு மற்றும் பராமரிப்பிற்காக வெ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகளுக்கான வெ. 5 கோடி அடங்கும். பிரிம் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு வெ.3,000-க்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட வெ.1,050 மற்றும் வெ.1,000 இனி வெ.1,200-ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. வெ.800 உதவித் தொகை பெற்று வந்த பிரிவினர் இனி புதிய பட்ஜெட்டின் கீழ் வெ.900 பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வெ.400 உதவித் தொகை வெ.450-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரிம் திட்டத்திற்காக சுமார் 70 லட்சம் ஏழை மக்களுக்கு வெ.680 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்திய சமூகத்தின் வருமானத்தை உயர்த்துவதற்கு வெ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.தெக்குன், அமானா இக்தியார் வர்த்தகக் கடனுதவிக்காக வெ. 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 50 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் வகுப்புகளை அமைப்பதற்கு ஒரு கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. *சுமார் 13 லட்சம் மாணவர்களுக்கு தலா வெ.250-க்கான பற்று அட்டைகள் வழங்கப்படும். இதுவரை பற்றுச்சீட்டுகளாக இருந்தவை பற்று அட்டைகளாக (டெபிட் கார்டுகள்) மாற்றப்பட்டுள்ளன. *மாணவர்களுக்கு தொடர்ந்து உபகாரச் சம்பளம் வழங்கும் திட்டத்தின் கீழ் வெ.430 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜே.பி.ஏ (வெ.160 கோடி), மாரா (வெ.200 கோடி), உயர் கல்வி அமைச்சு (வெ.25 கோடி), சுகாதார அமைச்சு (வெ.20 கோடி), கல்வி அமைச்சு (வெ.19 கோடி), மனித வள அமைச்சு (வெ.2 கோடியே 80 லட்சம்), விளையாட்டுத் துறை அமைச்சு (வெ.2 கோடியே 10 லட்சம்) ஆகியன அவற்றுள் அடங்கும். *பி.டி.பி.டி.என். கடனுதவியை திருப்பிச் செலுத்துவோருக்கு இன்று தொடங்கி 2017 டிசம்பர் வரை சிறப்பு கழிவுகள். *ஏழைகளுக்கு உதவும் திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு வெ.300, சிறார்கள் பராமரிப்பு உதவித் தொகையாக வெ. 4,450 தொடர்ந்து வழங்கப்படும். இதில் சுமார் 6 கோடியே 90 லட்சம் குடும்பங்கள் நன்மை அடையும். *சுமார் 12 கோடி முதியோர்களுக்கு உதவும் பொருட்டு வெ.42 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. * மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் திட்டதின் கீழ் வெ.53 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் வெ.15 கோடி மாற்றுத் திறனாளிகள் நன்மை அடைவார்கள். * நாளிதழ்கள், விவேக கைப்பேசிகள், இணையத் தள சந்தா, உடற்பயிற்சி மைய உறுப்பியம் ஆகியவற்றுக்கு ஆண்டுக்கு வெ.2,500 வரை தனி நபர் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. * அரசாங்க ஊழியர்களுக்கு ஒரே முறை உதவித் தொகையாக வெ.500 வழங்கப்படும். அவர்களின் சேவைகளை பாராட்டும் வகையில் ஜனவரி மாதம் அத்தொகை செலுத்தப்படும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்