தொழில் துறைகளின் தேவையை நிறைவு செய்யும் வகையில் உள்நாட்டுத் தொழிலாளர்களை உருவாக்கு வதற்கு தொழில் நுட்ப தொழிற் கல்வி பயிற்சிக்கு (டிவிஇடி) அரசாங்கம் வெ.460 கோடியை ஒதுக்கியுள்ளது. அரசாங்கத்தின் சொத்துக்களை மேம்படுத்தும் வகையில் தேசிய நீலப் பெருங்கடல் வியூகத்தின் மூலம் பயன்படுத்தப்படாமல் உள்ள ஒன்பது ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பாலி டெக்னிக்குகளாகவும் தொழிற்கல்வி கல்லூரிகளாகவும் உருமாற்றப்படும். இந்த ஆக்கப்பூர்வ முயற்சியின் மூலம் புதிய பாலி டெக்னிக்குகளை (தொழில் நுணுக்க நிறுவனம்) நிறுவு வதற்கான செலவுத் தொகை குறையும். அதன் மூலம் அரசாங்கம் ஏறக்குறைய வெ. 200 கோடியை சேமிக்க முடியும். இதையடுத்து தொழில்நுட்ப தொழிற் கல்வி, பயிற்சிக்கான கல்வி உபகரணங்களை தாம் உயர்த்தும் வகையில் வெ.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைப் போல திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்திற்கு வெ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தக் கூடிய வகையில் அவர்களின் திறனை மேம்படுத்த ஜிஎல்சிக்களின் மூலமாக மலேசியப் பயிற்சித் திட்ட (எஸ்எல்1எம்) செயல் முறையை 2017இல் 20,000 பட்டதாரிகளுக்கு விரிவுபடுத்த வெ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2016இல் அம்மாணவர் எண்ணிக்கை 15,000 ஆக இருந்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்